• Mar 12 2025

இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி; அதிகாலையில் கோர விபத்து

Chithra / Mar 11th 2025, 10:15 am
image


நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் பயணித்த சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. 

உயிரிழந்தவர்கள் 47 வயதுடைய ஆண் மற்றும் 41 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த இருவரும், வைத்தியசாலை சந்திப்பில் உள்ள ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் என்று பொலிசார் ​தெரிவித்தனர். 

உயிரிழந்த இருவரும், கொங்கஹவெல பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி லொறியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி; அதிகாலையில் கோர விபத்து நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் பயணித்த சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 47 வயதுடைய ஆண் மற்றும் 41 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும், வைத்தியசாலை சந்திப்பில் உள்ள ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் என்று பொலிசார் ​தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும், கொங்கஹவெல பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி லொறியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement