• May 09 2024

இஸ்ரேலில் காணாமல் போன கணவன்..! இலங்கையிலுள்ள மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை samugammedia

Chithra / Oct 12th 2023, 11:02 am
image

Advertisement

 

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா மதுவந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் சுஜித் நிஷங்க பண்டார யாதவர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சுஜித் பண்டார யாதவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவருக்கு 13 வயது மகளும் 8 வயது மகனும் உள்ளனர்.

தனது கல்வியை முடித்துவிட்டு, பல தொழில்களை செய்தவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பணியாற்ற சென்றுள்ளார்.

அங்கு பணிபுரியும் போது வென்னப்புவையில் வசிக்கும் ஜெயனா மதுவந்தி என்பவரை சந்தித்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணம் செய்துக் கொண்டனர்.

குடும்ப நெருக்கடி காரணமாக 2015ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு வந்து சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த அவர் இஸ்ரேலுக்குத் திரும்பினார்.

“நாங்கள் இருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் டுபாயிலிருந்து வந்தோம். திருமணமாகி சில காலம் கழித்து, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கணவர் வெளிநாடு  சென்றார்.

குறிப்பாக இரண்டு பிள்ளைகளையும் நன்றாகக் கற்பிப்பது அவசியமாக இருந்தது. எங்களுக்கும் சொந்த வீடு தேவைப்பட்டது.

எனவே, இரண்டு பிள்ளைகளையும் வென்னப்புவவிலுள்ள தனியார் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் கற்க ஆர்வமாக உள்ளனர்.

பின்னர் வென்னப்புவ பிரதேசத்தில் சொந்த வீடு ஒன்றை வாங்கினோம். இன்னும் சொந்த வீட்டுக்கு கணவர் வரவில்லை. சம்பவத்தன்று அவர் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார்.

சிறிது நேரத்தில் தாக்குதல் சத்தம் கேட்டது. அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாக கூறினார். அதன்பின், பல நொடிகள் கடக்கவில்லை அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன நடந்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

தொலைக்காட்சியில் பார்த்த பிறகுதான் போரின் தீவிரம் தெரிந்தது. அவர் என்னை சந்திப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் கணவர் வருவார் என்று காத்திருக்கிறேன்.

அப்பாவுக்கு என்ன நடந்தது என்று என் மகன் எப்போதும் கேட்கிறார். எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை... இந்த குழந்தைகளின் தந்தையான எனது கணவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை எப்படியாவது அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என காணாமல் போன நபரின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலில் காணாமல் போன கணவன். இலங்கையிலுள்ள மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை samugammedia  இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா மதுவந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் சுஜித் நிஷங்க பண்டார யாதவர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.சுஜித் பண்டார யாதவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவருக்கு 13 வயது மகளும் 8 வயது மகனும் உள்ளனர்.தனது கல்வியை முடித்துவிட்டு, பல தொழில்களை செய்தவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பணியாற்ற சென்றுள்ளார்.அங்கு பணிபுரியும் போது வென்னப்புவையில் வசிக்கும் ஜெயனா மதுவந்தி என்பவரை சந்தித்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணம் செய்துக் கொண்டனர்.குடும்ப நெருக்கடி காரணமாக 2015ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு வந்து சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த அவர் இஸ்ரேலுக்குத் திரும்பினார்.“நாங்கள் இருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் டுபாயிலிருந்து வந்தோம். திருமணமாகி சில காலம் கழித்து, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கணவர் வெளிநாடு  சென்றார்.குறிப்பாக இரண்டு பிள்ளைகளையும் நன்றாகக் கற்பிப்பது அவசியமாக இருந்தது. எங்களுக்கும் சொந்த வீடு தேவைப்பட்டது.எனவே, இரண்டு பிள்ளைகளையும் வென்னப்புவவிலுள்ள தனியார் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் கற்க ஆர்வமாக உள்ளனர்.பின்னர் வென்னப்புவ பிரதேசத்தில் சொந்த வீடு ஒன்றை வாங்கினோம். இன்னும் சொந்த வீட்டுக்கு கணவர் வரவில்லை. சம்பவத்தன்று அவர் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார்.சிறிது நேரத்தில் தாக்குதல் சத்தம் கேட்டது. அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாக கூறினார். அதன்பின், பல நொடிகள் கடக்கவில்லை அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன நடந்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.தொலைக்காட்சியில் பார்த்த பிறகுதான் போரின் தீவிரம் தெரிந்தது. அவர் என்னை சந்திப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் கணவர் வருவார் என்று காத்திருக்கிறேன்.அப்பாவுக்கு என்ன நடந்தது என்று என் மகன் எப்போதும் கேட்கிறார். எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை. இந்த குழந்தைகளின் தந்தையான எனது கணவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை எப்படியாவது அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என காணாமல் போன நபரின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement