• May 08 2024

புத்தளம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என நம்பிக்கை உள்ளது - அலிசப்ரி ரஹீம்!

Tamil nila / Dec 21st 2022, 10:42 pm
image

Advertisement

புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீமின் நிதி ஒதுக்கீடு மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



பாடசாலை அதிபர் மௌலவி என்.எம்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலந்து கொண்டதுடன், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



இங்கு தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் கூறியதாவது, 


முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்து எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் குறித்து கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.




மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். 


இந்த மாவட்ட மக்கள் என்ன எதிர்பார்ப்புக்களோடு என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்களோ அவர்களுடைய அத்தனை எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.


எனவே, இந்த மாவட்ட மக்கள் எதிர் நோக்கி வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


புத்தளம் மாவட்ட சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நல்ல தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.


எமது மாவட்டத்தில் 23 வீத தமிழ் முஸ்லிம்  சிறுபான்மைமக்கள் வாழாகின்றனர்.


இந்த மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் காணப்படுகிறது. இவர்களின் சாதாரண உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.


புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேச செயலகங்களுக்கு தமிழ் பேசக் கூடிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.


அதுபோல, பொலிஸ் நிலையங்கள் உட்பட அரச அலுவலகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.


புத்தளம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என நம்பிக்கை உள்ளது - அலிசப்ரி ரஹீம் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீமின் நிதி ஒதுக்கீடு மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.பாடசாலை அதிபர் மௌலவி என்.எம்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலந்து கொண்டதுடன், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் கூறியதாவது, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்து எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் குறித்து கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். இந்த மாவட்ட மக்கள் என்ன எதிர்பார்ப்புக்களோடு என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்களோ அவர்களுடைய அத்தனை எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.எனவே, இந்த மாவட்ட மக்கள் எதிர் நோக்கி வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.புத்தளம் மாவட்ட சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நல்ல தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.எமது மாவட்டத்தில் 23 வீத தமிழ் முஸ்லிம்  சிறுபான்மைமக்கள் வாழாகின்றனர்.இந்த மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் காணப்படுகிறது. இவர்களின் சாதாரண உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேச செயலகங்களுக்கு தமிழ் பேசக் கூடிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.அதுபோல, பொலிஸ் நிலையங்கள் உட்பட அரச அலுவலகங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement