• May 02 2024

உயர் நீதிமன்றத்தை நாடப்போகிறேன்..! வெடுக்குநாறிமலைக்கு வந்து பொங்கல் சாப்பிட்ட பின் சரத் வீரசேகர வீராப்பு samugammedia

Chithra / May 7th 2023, 8:58 am
image

Advertisement

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதிக்கு நேற்றையதினம் சென்ற பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர். அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.

ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின்

பொங்கலை வாங்கி உண்டணர்.

பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.

இதேவேளை, அங்கு கடுமையான மழை பெய்ததால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்தின் அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் கூர முடியாது என்றும் குறிப்பிட்டார்.


உயர் நீதிமன்றத்தை நாடப்போகிறேன். வெடுக்குநாறிமலைக்கு வந்து பொங்கல் சாப்பிட்ட பின் சரத் வீரசேகர வீராப்பு samugammedia வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதிக்கு நேற்றையதினம் சென்ற பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர். அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின்பொங்கலை வாங்கி உண்டணர்.பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.இதேவேளை, அங்கு கடுமையான மழை பெய்ததால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.அத்துடன், ஆலயத்தின் அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் கூர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement