• Nov 15 2024

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவில்லை..! கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு

Chithra / Aug 21st 2024, 3:08 pm
image

  

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

நாங்கள் எவருக்கும் அங்கீகாரத்தை வழங்கமாட்டோம் என கொழும்பு பேராயரின் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

மக்களே தங்களிற்கு யார் வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும்.

நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நாட்டில் கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் மாத்திரம்  ஈடுபடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார உட்பட பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்காத போதிலும் கத்தோலிக்க மக்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

கல்வி போன்ற விடயங்கள் குறித்து ஆராயவே நாங்கள் அவர்களை சந்தித்தோம்.இவை கத்தோலிக்கர்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இல்லை.

மீனவர்கள் விவகாரம் குறித்தும் பேசினோம் கத்தோலிக்கர்களில் பெருமளவு மீனவர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவில்லை. கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு   இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.நாங்கள் எவருக்கும் அங்கீகாரத்தை வழங்கமாட்டோம் என கொழும்பு பேராயரின் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.மக்களே தங்களிற்கு யார் வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும்.நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நாட்டில் கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் மாத்திரம்  ஈடுபடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார உட்பட பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்காத போதிலும் கத்தோலிக்க மக்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.கல்வி போன்ற விடயங்கள் குறித்து ஆராயவே நாங்கள் அவர்களை சந்தித்தோம்.இவை கத்தோலிக்கர்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இல்லை.மீனவர்கள் விவகாரம் குறித்தும் பேசினோம் கத்தோலிக்கர்களில் பெருமளவு மீனவர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement