பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமைக்குரிய ஆற்றல் உள்ளது. அவர்போன்ற இளைஞர்கள் நிச்சயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வேட்பாளர் பாரத் அருள்சாமியை ஆதரித்து கண்டி மஹியாவ மற்றும் குயின்ஸ் விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
' தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வதைவிட பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமை இருப்பதை நான் கூர்மையாக அவதானித்துவருகின்றேன்.
நல்ல திறமையான புதிய ஆளுமையை மனோ கணேசன் கண்டி மாவட்ட வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அவருக்கு 34 வயதுதான் ஆகின்றது. நான் முதன்முதலில் நாடாளுமன்றம் சென்றபோது எனது வயதும் 34 தான்.
தற்போது நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கிக்கொண்டு வருகின்றது. பாரத் போன்ற ஒருவர் இம்மாவட்டத்தில் எனக்கு பிரதியீடாக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் அவரிடம் ஆளுமைக்குரிய அம்சங்கள் உள்ளன.
என்னை போன்ற அரசியலுக்கு பரீட்சயமானவர்போலவே பாரத் செயற்பட்டுவருகின்றார். கண்டி மாவட்டத்துக்கு சிறந்த பொக்கிஷம் கிடைத்துள்ளது. முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் அவர் அரவணைத்து செல்லக்கூடியவர். எனவே, அவரின் வெற்றிக்கு முஸ்லிம் மக்களும் கூடுதல் பங்களிப்பை செய்ய வேண்டும்." - என்றார்.
பாரத் போன்ற ஒருவர் கண்டி மாவட்டத்தில் எனக்கு பிரதியீடாக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் - ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமைக்குரிய ஆற்றல் உள்ளது. அவர்போன்ற இளைஞர்கள் நிச்சயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வேட்பாளர் பாரத் அருள்சாமியை ஆதரித்து கண்டி மஹியாவ மற்றும் குயின்ஸ் விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறியவை வருமாறு,' தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வதைவிட பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமை இருப்பதை நான் கூர்மையாக அவதானித்துவருகின்றேன்.நல்ல திறமையான புதிய ஆளுமையை மனோ கணேசன் கண்டி மாவட்ட வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அவருக்கு 34 வயதுதான் ஆகின்றது. நான் முதன்முதலில் நாடாளுமன்றம் சென்றபோது எனது வயதும் 34 தான்.தற்போது நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கிக்கொண்டு வருகின்றது. பாரத் போன்ற ஒருவர் இம்மாவட்டத்தில் எனக்கு பிரதியீடாக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் அவரிடம் ஆளுமைக்குரிய அம்சங்கள் உள்ளன.என்னை போன்ற அரசியலுக்கு பரீட்சயமானவர்போலவே பாரத் செயற்பட்டுவருகின்றார். கண்டி மாவட்டத்துக்கு சிறந்த பொக்கிஷம் கிடைத்துள்ளது. முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் அவர் அரவணைத்து செல்லக்கூடியவர். எனவே, அவரின் வெற்றிக்கு முஸ்லிம் மக்களும் கூடுதல் பங்களிப்பை செய்ய வேண்டும்." - என்றார்.