• Oct 02 2024

ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கினேன்: மைத்திரி பெருமிதம்! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 10:44 pm
image

Advertisement

19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக தான் வழங்கியிருந்ததாகவும், தன்னை விமர்சித்த போதும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், கட்டளை தொடர்பான விவாதத்தின் போதே  அவர் இதனை தெரிவித்தார்.


ஊடகங்களுடன் பிரச்சினைகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதனை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 


இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் என்னை ஊடகங்கள் திட்டமிட்டு விமர்சித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்பில் பொய்யான செய்திகளையும் வெளியிட்டன. தவறான வகையில் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கப்பட்டது. நான் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கியிருந்தேன். என்னை விமர்சித்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குறித்த நிகழ்ச்சி தொடர்பான விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது இங்கேயே தீர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கினேன்: மைத்திரி பெருமிதம் SamugamMedia 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக தான் வழங்கியிருந்ததாகவும், தன்னை விமர்சித்த போதும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், கட்டளை தொடர்பான விவாதத்தின் போதே  அவர் இதனை தெரிவித்தார்.ஊடகங்களுடன் பிரச்சினைகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதனை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் என்னை ஊடகங்கள் திட்டமிட்டு விமர்சித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்பில் பொய்யான செய்திகளையும் வெளியிட்டன. தவறான வகையில் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கப்பட்டது. நான் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கியிருந்தேன். என்னை விமர்சித்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குறித்த நிகழ்ச்சி தொடர்பான விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது இங்கேயே தீர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement