• Nov 26 2024

அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வேன் - பைஸல்

Tharmini / Nov 24th 2024, 1:44 pm
image

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல்.

புத்தளம் மாவட்ட அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வேன்.

என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.முஹம்மட் பைஸல் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் அவர்களை வரவேற்கும் நிகழ்வொன்று நேற்று மதுரங்குளி - விருதோடைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது பொது மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் வரவேற்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு அவருக்கு கேக் ஊட்டப்பட்டதுடன் அவரும் ஆதரவாளர்களுக்கு கேக் ஊட்டனார்.

பின்னர் ஆதரவாளர்கள் பலருக்கும் பாராளுமன்ற உறுப்பினரால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் வாழும் மூவின மக்கள் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து தோழர் அநுர குமார திஸாநாயவுக்கு வாக்களித்து  ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

அதுபோல நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் எமது கட்சியின் மீதும், ஜனாதிபதி மீதும் மேலும் நம்பிக்கை வைத்தமையால்தான் யாருமே எதிர்பார்க்காத அளவு பெரும்பான்பநமை ஆசனங்களைப் பெற்றிருக்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதியில் எமது கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் கிடைத்தன. ஆனால், பொதுத் தேர்தலில் புத்தளம் தேர்தல் தொகுதியில் கூடுதலான வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றுள்ளோம்.

எனவே, எமது கட்சியையும், என்னையும் நம்பி வாக்களித்த புத்தளம் மாவட்ட மக்களின் நம்பிக்கையை நான் எப்போதும் பாதுகாப்பேன்.

மேலும், புத்தளம் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட கடற்தொழில், விவசாயம் என அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தீர்ப்பதற்கும் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுப்பேன்.

ஆகவே, ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே எமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். 

எனவே, புத்தளம் மாவட்ட மக்களும் கட்சி, பேதங்களை மறந்து தேசிய மக்கள்  சக்தியின் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியை செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுவதாகவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைஸல் மேலும் தெரிவித்தார்.



அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வேன் - பைஸல் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல். புத்தளம் மாவட்ட அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வேன். என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.முஹம்மட் பைஸல் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் அவர்களை வரவேற்கும் நிகழ்வொன்று நேற்று மதுரங்குளி - விருதோடைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.இதன்போது பொது மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் வரவேற்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு அவருக்கு கேக் ஊட்டப்பட்டதுடன் அவரும் ஆதரவாளர்களுக்கு கேக் ஊட்டனார்.பின்னர் ஆதரவாளர்கள் பலருக்கும் பாராளுமன்ற உறுப்பினரால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் வாழும் மூவின மக்கள் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து தோழர் அநுர குமார திஸாநாயவுக்கு வாக்களித்து  ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.அதுபோல நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் எமது கட்சியின் மீதும், ஜனாதிபதி மீதும் மேலும் நம்பிக்கை வைத்தமையால்தான் யாருமே எதிர்பார்க்காத அளவு பெரும்பான்பநமை ஆசனங்களைப் பெற்றிருக்கிறோம்.ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதியில் எமது கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் கிடைத்தன. ஆனால், பொதுத் தேர்தலில் புத்தளம் தேர்தல் தொகுதியில் கூடுதலான வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றுள்ளோம்.எனவே, எமது கட்சியையும், என்னையும் நம்பி வாக்களித்த புத்தளம் மாவட்ட மக்களின் நம்பிக்கையை நான் எப்போதும் பாதுகாப்பேன்.மேலும், புத்தளம் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட கடற்தொழில், விவசாயம் என அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தீர்ப்பதற்கும் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுப்பேன்.ஆகவே, ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே எமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே, புத்தளம் மாவட்ட மக்களும் கட்சி, பேதங்களை மறந்து தேசிய மக்கள்  சக்தியின் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியை செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுவதாகவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைஸல் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement