• Nov 28 2024

கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன்-பாரத் அருள்சாமி தெரிவிப்பு..!

Sharmi / Oct 22nd 2024, 5:21 pm
image

என்னை கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் உங்களுடைய பிரதிநிதியாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களை பொருத்தவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது எங்களுக்கு தேவையான சட்டங்கள் உருவாக்குவதற்காகும்.

அபிவிருத்தி என்பதையும் தாண்டி எங்களுக்கான பாராளுமன்றத்தில் எங்களுடைய உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உறுப்புரிமை நாங்கள் பெற்றுக்கொள்கின்றோம்.  

கடந்த காலங்களில் பலர் ஆளும் கட்சிகளிலும், எதிர்க்கட்சிகளிலும் 10 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எங்களுடைய கண்டி வாழ் தமிழ் மக்களுக்கு எதேனும் நன்மை கிடைத்ததா என்று கேட்டால் அது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இன்று ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு எத்தனையோ மாணவர்கள் கண்டி மாவட்டத்திலிருந்து வருகை தர முடியாதுள்ளனர்.

ஆகவே, அதில் சட்டமாற்றங்கள் கொண்டுவரப்பட்டதா என்பது இன்றைக்கும் ஒரு கேள்வி குறியாகவேதான் இருக்கின்றது.

இன்று அரசியலமைப்பு மாற்றியமைக்க போவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கக் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் அங்கு கட்டாயம் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று இருந்தாக வேண்டும்.

கண்டி மாவட்டத்தில் இன்னைக்கு பல பிரதேச செயலகங்கள் இருந்தாலும் கூட கிராம சேவகர்கள் பிரிவுகள் இன்னும் பிரிக்கப்படாமல் இருக்குகிறது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிற பகுதிகளில் ஒரே கிராம சேவகர் பிரிவில் கிட்டத்தட்ட 4,000 மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கு இன்னும் தீர்வுகள் வழங்கப்படவில்லை.

ஆகவே, என்னை உங்களுடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த பராளுமன்றத்தில் உங்களுடைய பிரநிதியாக இந்த கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன்  எனவும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன்-பாரத் அருள்சாமி தெரிவிப்பு. என்னை கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் உங்களுடைய பிரதிநிதியாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்களை பொருத்தவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது எங்களுக்கு தேவையான சட்டங்கள் உருவாக்குவதற்காகும். அபிவிருத்தி என்பதையும் தாண்டி எங்களுக்கான பாராளுமன்றத்தில் எங்களுடைய உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உறுப்புரிமை நாங்கள் பெற்றுக்கொள்கின்றோம்.  கடந்த காலங்களில் பலர் ஆளும் கட்சிகளிலும், எதிர்க்கட்சிகளிலும் 10 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எங்களுடைய கண்டி வாழ் தமிழ் மக்களுக்கு எதேனும் நன்மை கிடைத்ததா என்று கேட்டால் அது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.இன்று ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு எத்தனையோ மாணவர்கள் கண்டி மாவட்டத்திலிருந்து வருகை தர முடியாதுள்ளனர். ஆகவே, அதில் சட்டமாற்றங்கள் கொண்டுவரப்பட்டதா என்பது இன்றைக்கும் ஒரு கேள்வி குறியாகவேதான் இருக்கின்றது.இன்று அரசியலமைப்பு மாற்றியமைக்க போவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கக் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அங்கு கட்டாயம் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று இருந்தாக வேண்டும்.கண்டி மாவட்டத்தில் இன்னைக்கு பல பிரதேச செயலகங்கள் இருந்தாலும் கூட கிராம சேவகர்கள் பிரிவுகள் இன்னும் பிரிக்கப்படாமல் இருக்குகிறது.தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிற பகுதிகளில் ஒரே கிராம சேவகர் பிரிவில் கிட்டத்தட்ட 4,000 மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கு இன்னும் தீர்வுகள் வழங்கப்படவில்லை.ஆகவே, என்னை உங்களுடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த பராளுமன்றத்தில் உங்களுடைய பிரநிதியாக இந்த கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement