• Apr 26 2024

மருத்துவக் கழிவுகளை கோம்பயன் மணல் மயானப் பகுதியில் எரிக்க யோசனை

Chithra / Feb 1st 2023, 7:18 am
image

Advertisement

யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  த.சத்தியமூர்த்தி, மாநகர சபையின் ஆணையாளர், மாநகர சபையின் பொறியியலாளர்கள், மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்

குறிப்பாக வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படுகின்றன. எனினும், யாழ்ப்பாண வைத்திய சாலையானது, யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன.

எனவே அந்த கழிவுகளை யாழ்ப்பாண மாநகரத்துக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அதனை அழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.


மருத்துவக் கழிவுகளை கோம்பயன் மணல் மயானப் பகுதியில் எரிக்க யோசனை யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  த.சத்தியமூர்த்தி, மாநகர சபையின் ஆணையாளர், மாநகர சபையின் பொறியியலாளர்கள், மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்குறிப்பாக வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படுகின்றன. எனினும், யாழ்ப்பாண வைத்திய சாலையானது, யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன.எனவே அந்த கழிவுகளை யாழ்ப்பாண மாநகரத்துக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அதனை அழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement