• Apr 22 2025

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது நீதிமன்றமே தவிர அரசியல்வாதிகள் அல்ல - டக்ளஸ் தேவானந்தா!

Thansita / Apr 21st 2025, 4:43 pm
image

குற்றச்சாட்டுகள் யாருக்கு எதிராகவேனும் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்

கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட செயலாளர் நாயகம் 

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஒரே நாளில் நடத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும் எனவும் தெரிவித்தார்

மேலும்  குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது நீதிமன்றமே தவிர அரசியல்வாதிகள் அல்ல - டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டுகள் யாருக்கு எதிராகவேனும் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மேலும் அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஒரே நாளில் நடத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும் எனவும் தெரிவித்தார்மேலும்  குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

Advertisement

Advertisement

Advertisement