• Nov 25 2024

அநுரவின் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீட்சத்திற்கு நல்லது- கருணாநிதி சுட்டிக்காட்டு..!

Sharmi / Oct 12th 2024, 11:02 am
image

அநுர குமாரவின் ஆட்சி ஒரு சிறந்த ஆட்சியாக நாம் மட்டுமில்ல உலக நாடுகள் கூட ஏற்றுக்கொள்கின்ற நிலையில்  நாம் அவரை ஆதரிக்க வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி  2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற  தேர்தலில் எமது கட்சி போட்டியிடவில்லை என தெரிவித்தார்

இருந்த போதிலும் அரசாங்கத்தின் மாற்றத்தை சற்று நாம் சிந்திக்க வேண்டும் காரணம் கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நாங்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு இருப்போம். 

இந்த நாட்டிற்கு எதிர்கட்சி தரமானதாகவும் நேர்மையாகவும் அமைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். 

ஆனால் இன்று அனுரகுமாரவின் ஆட்சி  ஒரு சிறந்த ஆட்சியாக நாம் மட்டுமில்ல உலக நாடுகள் கூட ஏற்றுக்கொள்கிறது.

எனவே நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.

அவருக்கு 120 ஆசனங்களை பெற்று கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு வங்குரோத்து நாடாக மாறிவிடலாம். நாங்கள் போட்டியிட்டு அவரின் மாவட்டத்தின் தோல்வியடைய செய்ய விரும்பவில்லை 

அவர் வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீசத்திற்கு நல்லது. 

இந்த கட்சி வியாபார நோக்கத்தை கொண்ட கட்சி அல்ல அல்லது வேறு ஏதாவது எதிர்பார்ப்பும் கிடையாது.  

எனவே ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்துவோம். 

மலையகத்தில் மட்டுமல்ல இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழர்களின் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் நல்லவர்கள் யாரோ அவர்களை தெரிவு செய்யுங்கள்  என கேட்டுக்கொண்டார்

மனோகணேசன்... சுரேந்திரன் ஜனாதிபதி அவர்களை சந்திக்கலாம் தமிழ் மக்கள் சந்தித்தால் புறக்கணிக்கின்றனர் 

இந்த நிலைமை மாறி வேண்டும். ஜனாதிபதியின் கட்சியில் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு சிங்களவர்களுக்கு வாக்களியுங்கள் 

வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் முற்றாக வந்துவிட்டது. தற்பொழுது வடக்கு கிழக்கில் பயங்கரவாத முற்றாக குறைந்துவிட்டது 

தற்போது வாள்வெட்டு  கூட்டம் இல்லை இதன் பின்னணியில் யார்  இருந்தார்கள் சந்தேகம் உள்ளது

மட்டக்களப்பில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலே பலர் கொலை செய்யப்பட்டார்கள். சிறுவர்கள் கூட கொலை செய்யப்பட்டார்கள்.

அப்பொழுது கிழக்கு மாகாணத்திலே பிள்ளையான்  இராட்சகனாக இருந்தார்.

எட்டு வயது பிள்ளை கொலை செய்யப்பட்டார். கொலையாளி  கைது செய்யப்பட்டார். நிச்சயமாக இதை பிள்ளையான் தான் செய்ய சொன்னார் என்று சொல்லி இருப்பார்கள்

பிள்ளையான் வீட்டில் இருப்பதற்கோ அல்லது வீதியில்  இருக்வோ ஆள் இல்ல அவர் சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்.

 இதனை ஜனாதிபதி அவர்களுக்கு  ஞாபகப்படுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அநுரவின் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீட்சத்திற்கு நல்லது- கருணாநிதி சுட்டிக்காட்டு. அநுர குமாரவின் ஆட்சி ஒரு சிறந்த ஆட்சியாக நாம் மட்டுமில்ல உலக நாடுகள் கூட ஏற்றுக்கொள்கின்ற நிலையில்  நாம் அவரை ஆதரிக்க வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.கொழும்பில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி  2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற  தேர்தலில் எமது கட்சி போட்டியிடவில்லை என தெரிவித்தார்இருந்த போதிலும் அரசாங்கத்தின் மாற்றத்தை சற்று நாம் சிந்திக்க வேண்டும் காரணம் கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நாங்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு இருப்போம். இந்த நாட்டிற்கு எதிர்கட்சி தரமானதாகவும் நேர்மையாகவும் அமைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று அனுரகுமாரவின் ஆட்சி  ஒரு சிறந்த ஆட்சியாக நாம் மட்டுமில்ல உலக நாடுகள் கூட ஏற்றுக்கொள்கிறது.எனவே நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.அவருக்கு 120 ஆசனங்களை பெற்று கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு வங்குரோத்து நாடாக மாறிவிடலாம். நாங்கள் போட்டியிட்டு அவரின் மாவட்டத்தின் தோல்வியடைய செய்ய விரும்பவில்லை அவர் வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீசத்திற்கு நல்லது. இந்த கட்சி வியாபார நோக்கத்தை கொண்ட கட்சி அல்ல அல்லது வேறு ஏதாவது எதிர்பார்ப்பும் கிடையாது.  எனவே ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்துவோம். மலையகத்தில் மட்டுமல்ல இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழர்களின் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் நல்லவர்கள் யாரோ அவர்களை தெரிவு செய்யுங்கள்  என கேட்டுக்கொண்டார்மனோகணேசன். சுரேந்திரன் ஜனாதிபதி அவர்களை சந்திக்கலாம் தமிழ் மக்கள் சந்தித்தால் புறக்கணிக்கின்றனர் இந்த நிலைமை மாறி வேண்டும். ஜனாதிபதியின் கட்சியில் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு சிங்களவர்களுக்கு வாக்களியுங்கள் வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் முற்றாக வந்துவிட்டது. தற்பொழுது வடக்கு கிழக்கில் பயங்கரவாத முற்றாக குறைந்துவிட்டது தற்போது வாள்வெட்டு  கூட்டம் இல்லை இதன் பின்னணியில் யார்  இருந்தார்கள் சந்தேகம் உள்ளதுமட்டக்களப்பில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலே பலர் கொலை செய்யப்பட்டார்கள். சிறுவர்கள் கூட கொலை செய்யப்பட்டார்கள். அப்பொழுது கிழக்கு மாகாணத்திலே பிள்ளையான்  இராட்சகனாக இருந்தார்.எட்டு வயது பிள்ளை கொலை செய்யப்பட்டார். கொலையாளி  கைது செய்யப்பட்டார். நிச்சயமாக இதை பிள்ளையான் தான் செய்ய சொன்னார் என்று சொல்லி இருப்பார்கள்பிள்ளையான் வீட்டில் இருப்பதற்கோ அல்லது வீதியில்  இருக்வோ ஆள் இல்ல அவர் சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர். இதனை ஜனாதிபதி அவர்களுக்கு  ஞாபகப்படுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement