நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட.
சிறப்பு முகாம்களில் அவர்களை வைத்து உடலாலும், உள்ளத்தாலும் எவ்வளவோ துன்புறுத்தி விட்டீர்கள். இதற்கு பின்னர் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா?
ஈழத்தில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறபடியால்தான் அவர்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்கின்ற விதமோ, நடத்துகின்ற விதமோ அறமற்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சமமானது என்று கூட சொல்ல முடியாது அதைவிடவும் சற்று மேலானது.
ஏற்கனவே ஒரு தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாக இந்திய ஒன்றியம் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது. மேலும் அதுபோல் ஒரு பாவச் செயல் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது எமது கடமை. என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி முகாமில் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி முகாமில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழருக்கு ஏதாவது நேர்ந்தால் அரசே பொறுப்பு - எழும் கண்டனங்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட.சிறப்பு முகாம்களில் அவர்களை வைத்து உடலாலும், உள்ளத்தாலும் எவ்வளவோ துன்புறுத்தி விட்டீர்கள். இதற்கு பின்னர் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையாஈழத்தில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறபடியால்தான் அவர்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்கின்ற விதமோ, நடத்துகின்ற விதமோ அறமற்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சமமானது என்று கூட சொல்ல முடியாது அதைவிடவும் சற்று மேலானது. ஏற்கனவே ஒரு தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாக இந்திய ஒன்றியம் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது. மேலும் அதுபோல் ஒரு பாவச் செயல் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது எமது கடமை. என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் திருச்சி முகாமில் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.