• Sep 19 2024

நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பேன்! – அநுர உறுதி

Chithra / Aug 19th 2024, 11:01 am
image

Advertisement


தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் 3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டிருந்ததாகவும், அதனை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார். 

இதன் விளைவாக, இந்தக் கடனை அடைக்க ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் அமல்படுத்தப்பட்டது.

கடன் கிட்டத்தட்ட முழுமையாக செலுத்தப்பட்டாலும், லிற்றருக்கு 50 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு முழுமையான மறு ஆய்வு நடத்தி, அதன்படி எரிபொருள் விலையை குறைக்கும் என்று அவர் உறுதியளித்தார். 

நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பேன் – அநுர உறுதி தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் 3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டிருந்ததாகவும், அதனை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார். இதன் விளைவாக, இந்தக் கடனை அடைக்க ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் அமல்படுத்தப்பட்டது.கடன் கிட்டத்தட்ட முழுமையாக செலுத்தப்பட்டாலும், லிற்றருக்கு 50 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது.தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு முழுமையான மறு ஆய்வு நடத்தி, அதன்படி எரிபொருள் விலையை குறைக்கும் என்று அவர் உறுதியளித்தார். 

Advertisement

Advertisement

Advertisement