• Nov 13 2024

'நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி'-ரஜினி பாணியில் ரஞ்சன் பிரச்சாரம்..!

Sharmi / Nov 7th 2024, 1:48 pm
image

'நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எனவே, பொதுத்தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள் எனவும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெல்வது உறுதி என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (07) அட்டனில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன், ஷான் பிரதீஸ் உட்பட பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் ஆதரவு வலுத்துள்ளது. 

இதனால்தான் கட்சிக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நான் நாடாளுமன்றம் வருவதை தடுப்பதற்கு சிலர் நீதிமன்றத்தைக்கூட நாடினார்கள். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கட்சியை தடை செய்வதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றன. அதுவும் வெற்றியளிக்காது.

நாம் பொய்களை கூறவில்லை. உண்மையை கூறியே அரசியல் நடத்திவருகின்றோம். அதனால்தான் எமது வழியில் மக்கள் வருகின்றனர். 

எனவே, எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சியினரை நாடாளுமன்றம் அனுப்புங்கள். எனக்கு பலமாக இருக்கக்கூடியவர்களை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அனுப்பு வையுங்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆனங்களை இலக்கு வைத்துள்ளோம். அதில் அனுஷா சந்திரசேகரன் வெற்றிபெறுவது உறுதி. சந்திரசேகரனின் தந்தை, மலையக மக்களுக்கு நிறைய சேவைகளை செய்துள்ளார். 35 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளார். நல்ல மனிதர்கள்தான் இந்த கட்சியில் உள்ளனர்.

நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எமது கட்சி வெல்வது உறுதி. 

பொதுத்தேர்தலில் சிறந்த முடிவு கிடைக்கும். இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்து எமக்கே கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.

'நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி'-ரஜினி பாணியில் ரஞ்சன் பிரச்சாரம். 'நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எனவே, பொதுத்தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள் எனவும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெல்வது உறுதி என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (07) அட்டனில் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன், ஷான் பிரதீஸ் உட்பட பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஐக்கிய ஜனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் ஆதரவு வலுத்துள்ளது. இதனால்தான் கட்சிக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் நாடாளுமன்றம் வருவதை தடுப்பதற்கு சிலர் நீதிமன்றத்தைக்கூட நாடினார்கள். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கட்சியை தடை செய்வதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றன. அதுவும் வெற்றியளிக்காது.நாம் பொய்களை கூறவில்லை. உண்மையை கூறியே அரசியல் நடத்திவருகின்றோம். அதனால்தான் எமது வழியில் மக்கள் வருகின்றனர். எனவே, எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சியினரை நாடாளுமன்றம் அனுப்புங்கள். எனக்கு பலமாக இருக்கக்கூடியவர்களை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அனுப்பு வையுங்கள்.நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆனங்களை இலக்கு வைத்துள்ளோம். அதில் அனுஷா சந்திரசேகரன் வெற்றிபெறுவது உறுதி. சந்திரசேகரனின் தந்தை, மலையக மக்களுக்கு நிறைய சேவைகளை செய்துள்ளார். 35 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளார். நல்ல மனிதர்கள்தான் இந்த கட்சியில் உள்ளனர்.நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எமது கட்சி வெல்வது உறுதி. பொதுத்தேர்தலில் சிறந்த முடிவு கிடைக்கும். இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்து எமக்கே கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement