• Apr 28 2024

பணம் வந்துவிட்டால் பத்தும் பேசுவார்! யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கம் புகார்!!

crownson / Dec 6th 2022, 10:51 am
image

Advertisement

எனி டைம் மனி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தாயரித்து இயக்கியிருக்கும் படம் 'தாதா'.

இப் படத்தில் யோகிபாபு  நிதின்சத்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ், கலைப்புலி ஜி.சேகரன் டிரைலரை வெளியிட தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான பாபுகணேஷ் பேசியதாவது:-  இந்தப்படத்தில் நடித்த யோகிபாபு, நான் நான்கு சீன்கள்தான் நடித்திருக்கிறேன், ஹீரோவாக நடிக்கவில்லை காமெடியன்தான் என்று பேசி வருகிறார்.

இது வருத்தமான ஒன்று. நீங்கள் காமெடியன்தான் இல்லையென்று சொல்லவில்லை.

ஆனால் நீங்கள் நடித்துள்ள படம் ஓட வேண்டும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கவேண்டும்.

ஒரு படத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வேலை செய்திருப்பார்கள். அந்த 200 பேரின் குடும்பங்களையும் நினைத்துப்பார்த்து நீங்கள் பேசவேண்டும்.

தயாரிப்பாளர் மதுரை செல்வம் பேசியபோது,   சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லாமே பெரிய படம்தான்.

எந்த படத்தில் நடித்தாலும் நடிகர்கள் ஓசியிலா நடிக்கிறார்கள். எல்லா படங்களுமே கேமரா வைத்துதான் எடுக்கப்படுகிறது.

எல்லா படங்களும் திரையில்தான் திரையிடப்படுகிறதே தவிர தரையில் இல்லை. கின்னஸ் கிஷோர் தயாரித்துள்ள இந்த 'தாதா' வெற்றி படமாக அமைய வாழ்த்துகிறேன்'என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசியபோது,  தாதா என்றால் மஹாராஷ்டிராவில் சிறப்பானவர், மூத்தவர், நன்மை செய்பவர் என்று அர்த்தம்.

வங்காளத்தில் மரியாதைக்குரியர் என்று அர்த்தம். ஆனால் தமிழில்தான் அதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளர்களும் சால்மன் மீனும் ஒன்று. சால்மன் மீன் ஆற்றில்தான் பிறந்து கடலுக்குப் போகும் பிறகு முட்டையிடுவதற்காக மீண்டும் ஆற்றுக்கே வந்துவிடும்.

அதுபோல்தான் சினிமா தயாரிப்பாளர்கள்  எங்கே சென்றாலும் மறுபடியும் சினிமாவுக்கு வந்துவிடுவார்கள்.

எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக போராளி இல்லை.

அதற்கு காரணம் உறுப்பினர்கள்தான். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் எப்படி போராளி தலைவராக வருவான்?' என்று கேள்வி எழுப்பினார்.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் பேசியதாவது,  இந்தப்படத்தில் நடித்த யோகிபாபு, நிதின்சத்யா மற்ற நடிகர், நடிகைகள் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கவேண்டும்.

அவர்கள் வராதது வருத்தம் தரும் நிகழ்வு, கண்டனத்திற்குரிய செயல்பாடு. நான் இந்தப்படத்தை பார்த்துவிட்டேன்.

இது இரண்டு ஹீரோ கதைதான். யோகிப்பாபு படம் முழுக்க வருகிறார்.

இந்தப்படத்தில் நடித்துவிட்டு டப்பிங் பேச மறுத்தார். நான்தான்சமரசம் செய்து பேசவைத்தேன்.

தயாரிப்பாளருடன் என்ன கருத்துவேறுபாடு இருந்தாலும் நீங்கள் நடித்த படம் பற்றி நீங்களே தவறாக பேசக்கூடாது.

படம் வெளியாக உதவி புரிந்திருக்கவேண்டும், தயாரிப்பாளரின் கஷ்டத்தில் தோள் கொடுத்திருக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு நடிக்கவில்லை என்று சொல்லி தவிர்க்கக்கூடாது. சினிமாவில் கஷ்டப்பட்டு வளர்ந்துள்ள நடிகர் யோகிபாபு ,பணம் வந்துவிட்டால் இப்படி மாறக்கூடாது என பலரும் நடிகர் யோகிபாபு , செயற்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பணம் வந்துவிட்டால் பத்தும் பேசுவார் யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கம் புகார் எனி டைம் மனி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தாயரித்து இயக்கியிருக்கும் படம் 'தாதா'. இப் படத்தில் யோகிபாபு  நிதின்சத்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ், கலைப்புலி ஜி.சேகரன் டிரைலரை வெளியிட தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான பாபுகணேஷ் பேசியதாவது:-  இந்தப்படத்தில் நடித்த யோகிபாபு, நான் நான்கு சீன்கள்தான் நடித்திருக்கிறேன், ஹீரோவாக நடிக்கவில்லை காமெடியன்தான் என்று பேசி வருகிறார். இது வருத்தமான ஒன்று. நீங்கள் காமெடியன்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் நடித்துள்ள படம் ஓட வேண்டும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கவேண்டும்.ஒரு படத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வேலை செய்திருப்பார்கள். அந்த 200 பேரின் குடும்பங்களையும் நினைத்துப்பார்த்து நீங்கள் பேசவேண்டும். தயாரிப்பாளர் மதுரை செல்வம் பேசியபோது,   சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லாமே பெரிய படம்தான். எந்த படத்தில் நடித்தாலும் நடிகர்கள் ஓசியிலா நடிக்கிறார்கள். எல்லா படங்களுமே கேமரா வைத்துதான் எடுக்கப்படுகிறது. எல்லா படங்களும் திரையில்தான் திரையிடப்படுகிறதே தவிர தரையில் இல்லை. கின்னஸ் கிஷோர் தயாரித்துள்ள இந்த 'தாதா' வெற்றி படமாக அமைய வாழ்த்துகிறேன்'என்றார்.தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசியபோது,  தாதா என்றால் மஹாராஷ்டிராவில் சிறப்பானவர், மூத்தவர், நன்மை செய்பவர் என்று அர்த்தம். வங்காளத்தில் மரியாதைக்குரியர் என்று அர்த்தம். ஆனால் தமிழில்தான் அதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்களும் சால்மன் மீனும் ஒன்று. சால்மன் மீன் ஆற்றில்தான் பிறந்து கடலுக்குப் போகும் பிறகு முட்டையிடுவதற்காக மீண்டும் ஆற்றுக்கே வந்துவிடும்.அதுபோல்தான் சினிமா தயாரிப்பாளர்கள்  எங்கே சென்றாலும் மறுபடியும் சினிமாவுக்கு வந்துவிடுவார்கள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக போராளி இல்லை. அதற்கு காரணம் உறுப்பினர்கள்தான். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் எப்படி போராளி தலைவராக வருவான்' என்று கேள்வி எழுப்பினார்.தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் பேசியதாவது,  இந்தப்படத்தில் நடித்த யோகிபாபு, நிதின்சத்யா மற்ற நடிகர், நடிகைகள் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கவேண்டும். அவர்கள் வராதது வருத்தம் தரும் நிகழ்வு, கண்டனத்திற்குரிய செயல்பாடு. நான் இந்தப்படத்தை பார்த்துவிட்டேன். இது இரண்டு ஹீரோ கதைதான். யோகிப்பாபு படம் முழுக்க வருகிறார். இந்தப்படத்தில் நடித்துவிட்டு டப்பிங் பேச மறுத்தார். நான்தான்சமரசம் செய்து பேசவைத்தேன். தயாரிப்பாளருடன் என்ன கருத்துவேறுபாடு இருந்தாலும் நீங்கள் நடித்த படம் பற்றி நீங்களே தவறாக பேசக்கூடாது. படம் வெளியாக உதவி புரிந்திருக்கவேண்டும், தயாரிப்பாளரின் கஷ்டத்தில் தோள் கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நடிக்கவில்லை என்று சொல்லி தவிர்க்கக்கூடாது. சினிமாவில் கஷ்டப்பட்டு வளர்ந்துள்ள நடிகர் யோகிபாபு ,பணம் வந்துவிட்டால் இப்படி மாறக்கூடாது என பலரும் நடிகர் யோகிபாபு , செயற்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement