• Nov 28 2024

நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெற்றால்..! தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை

Chithra / Dec 7th 2023, 7:51 am
image

 

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகின்றது.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும்.

மேலும் வெடுக்குநாறி பகுதியில் பௌத்த சின்னங்களை அழித்து அதன் மீது பிற மதத்தின் சின்னங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மத்திய அரசுக்குள் இருக்கும் நிலையில் பௌத்த சின்னங்கள் அங்கு அழிக்கப்படுகிறது என்றால் தனி இராச்சிய அதிகராத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும். 

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் வீரர்கள் உயிர் நீத்தார்கள்.பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூர்வற்கு அல்ல என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை சிறுவர்களுக்கு அணிவித்து அவர்களின் கழுத்தில் சயனைட் மாதிரியிலான குப்பிகளை அணிவித்து அவர்களை மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குப்பற்ற செய்துள்ளார்கள்.இவ்வாறான செயற்பாடுகளையிட்டு வெட்கமடைய வேண்டும். என தெரிவித்தார்.


நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெற்றால். தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை  நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகின்றது.நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும்.மேலும் வெடுக்குநாறி பகுதியில் பௌத்த சின்னங்களை அழித்து அதன் மீது பிற மதத்தின் சின்னங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மத்திய அரசுக்குள் இருக்கும் நிலையில் பௌத்த சின்னங்கள் அங்கு அழிக்கப்படுகிறது என்றால் தனி இராச்சிய அதிகராத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் வீரர்கள் உயிர் நீத்தார்கள்.பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூர்வற்கு அல்ல என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை சிறுவர்களுக்கு அணிவித்து அவர்களின் கழுத்தில் சயனைட் மாதிரியிலான குப்பிகளை அணிவித்து அவர்களை மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குப்பற்ற செய்துள்ளார்கள்.இவ்வாறான செயற்பாடுகளையிட்டு வெட்கமடைய வேண்டும். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement