• May 04 2024

இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால்..! இது நடக்கும்..! செல்வம் எம்.பி திட்டவட்டம்..!samugammedia

Sharmi / Jul 29th 2023, 1:07 pm
image

Advertisement

இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும்.அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்க முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்களவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகள் ஒருபோதும் மாறாது என்பதை கடந்தகால அவர்களின் சிந்தனை சொல்கின்றது.இவ்வாறான நிலையிலேயே இவ்வாறான முடிவுகளை எடுத்தல் என்ன என்பதை நான் மக்களிடம் விடுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணகரம் (ஜனா) தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் இந்த அரசாங்கத்தின் அதிகளவான அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரியாக காட்டுக்கின்ற செயற்பாடுகளையே சிங்கள தலைவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

சிங்களத் தலைவர்களின் பலரின் மூளையில் இருப்பதெல்லாம் தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.எமது இனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கின்ற அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியும்.


வெறும் வெற்றுப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், உதட்டளவில் பேசிக் கொள்ளாமல் எமக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும். அவர்களுடன் நாங்களும் இணைய வேண்டும்.

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தமிழ் நாட்டினை எந்தளவு பயன்படுத்தியது என்று பார்த்தால் அது பூச்சியமாகும். உதட்டளவில் தேசியம் பேசாமல் அனைவரையும் ஒன்றினைக்கின்ற செயற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும்.


இந்த நாட்டை மேலே கொண்டு வருவதாக இருந்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்கி 13வது திருத்தத்தினுடைய சரத்துகள் அனைத்தையும் பூரணமாக அமுல்ப்படுத்தினால் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து முதலீடுகளை நாங்களே பெற்று நாட்டை வ்லுவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால். இது நடக்கும். செல்வம் எம்.பி திட்டவட்டம்.samugammedia இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும்.அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்க முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.சிங்களவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகள் ஒருபோதும் மாறாது என்பதை கடந்தகால அவர்களின் சிந்தனை சொல்கின்றது.இவ்வாறான நிலையிலேயே இவ்வாறான முடிவுகளை எடுத்தல் என்ன என்பதை நான் மக்களிடம் விடுகின்றேன் என்றும் தெரிவித்தார்.யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணகரம் (ஜனா) தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் இந்த அரசாங்கத்தின் அதிகளவான அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரியாக காட்டுக்கின்ற செயற்பாடுகளையே சிங்கள தலைவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.சிங்களத் தலைவர்களின் பலரின் மூளையில் இருப்பதெல்லாம் தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.எமது இனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கின்ற அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியும்.வெறும் வெற்றுப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், உதட்டளவில் பேசிக் கொள்ளாமல் எமக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும். அவர்களுடன் நாங்களும் இணைய வேண்டும்.தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தமிழ் நாட்டினை எந்தளவு பயன்படுத்தியது என்று பார்த்தால் அது பூச்சியமாகும். உதட்டளவில் தேசியம் பேசாமல் அனைவரையும் ஒன்றினைக்கின்ற செயற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும்.இந்த நாட்டை மேலே கொண்டு வருவதாக இருந்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்கி 13வது திருத்தத்தினுடைய சரத்துகள் அனைத்தையும் பூரணமாக அமுல்ப்படுத்தினால் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து முதலீடுகளை நாங்களே பெற்று நாட்டை வ்லுவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement