• May 19 2024

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அரசிலிருந்து வெளியேறலாம்! - இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Nov 28th 2023, 12:28 pm
image

Advertisement


ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எவருக்கும் உரிமை உள்ளது என  ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

அத்துடன் முரண்பட்டுக்கொண்டு அமைச்சரவைக்குள் இருப்பதைவிட ஒதுங்கிக்கொள்வதே நல்லது. 

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு மாத காலமாக கிரிக்கெட்டின் பெயரை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதே சிலரது தேவையாக உள்ளது. ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொண்டு அரசாங்கத்திற்குள் தொங்கிக் கொண்டு அவர்கள் இருக்கின்றனர். 

நாங்கள் யாரையும் பிடித்து வைத்துக்கொண்டில்லை. விரும்பியவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்ளலாம்.

அத்துடன் அடுத்த வருடம் தேர்தலுக்கான குறித்த காலம் வரை இந்த அரசாங்கமே தொடரும். அந்த வகையில் ஜனாதிபதியை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் எவருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்க முடியாது. என்றார்.

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அரசிலிருந்து வெளியேறலாம் - இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எவருக்கும் உரிமை உள்ளது என  ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.அத்துடன் முரண்பட்டுக்கொண்டு அமைச்சரவைக்குள் இருப்பதைவிட ஒதுங்கிக்கொள்வதே நல்லது. பாராளுமன்றத்தில் நேற்றையதினம்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.ஒரு மாத காலமாக கிரிக்கெட்டின் பெயரை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.அரசாங்கத்தை கவிழ்ப்பதே சிலரது தேவையாக உள்ளது. ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொண்டு அரசாங்கத்திற்குள் தொங்கிக் கொண்டு அவர்கள் இருக்கின்றனர். நாங்கள் யாரையும் பிடித்து வைத்துக்கொண்டில்லை. விரும்பியவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்ளலாம்.அத்துடன் அடுத்த வருடம் தேர்தலுக்கான குறித்த காலம் வரை இந்த அரசாங்கமே தொடரும். அந்த வகையில் ஜனாதிபதியை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் எவருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்க முடியாது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement