• May 06 2024

சஜித்தை சந்தித்த ரொஷான்! பதவி நீக்கத்திற்கு காரணம் கூறிய ஜனாதிபதி ரணில் samugammedia

Chithra / Nov 28th 2023, 12:33 pm
image

Advertisement

 

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணத்தை அரச தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

வாராந்த அமைச்சரவை சந்திப்பு நேற்று (27) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு ரொஷான் ரணசிங்கவிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.

மேலும், மகாவலி காணி பகிர்வு அமைச்சராக அவர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழியப்பட்ட பெரும்பாலானோரில், அவரது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தமை ஏன் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சூழலில் ரொஷான் ரணசிங்க அதிபரின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை வழங்காத நிலையில் அவரின் அமைச்சு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை உதாசீனம் செய்தமையும் அவரின் பதவி நீக்கத்துக்கான காரணமெனவும் அரசாங்க தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித்தை சந்தித்த ரொஷான் பதவி நீக்கத்திற்கு காரணம் கூறிய ஜனாதிபதி ரணில் samugammedia  முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணத்தை அரச தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது.அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.வாராந்த அமைச்சரவை சந்திப்பு நேற்று (27) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு ரொஷான் ரணசிங்கவிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.மேலும், மகாவலி காணி பகிர்வு அமைச்சராக அவர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழியப்பட்ட பெரும்பாலானோரில், அவரது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தமை ஏன் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான சூழலில் ரொஷான் ரணசிங்க அதிபரின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை வழங்காத நிலையில் அவரின் அமைச்சு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை உதாசீனம் செய்தமையும் அவரின் பதவி நீக்கத்துக்கான காரணமெனவும் அரசாங்க தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement