• May 17 2024

மஹிந்தவின் தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு! samugammedia

Chithra / Apr 20th 2023, 9:11 am
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு, இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல முக்கிய இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகளை பாராட்டினர்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான எம்.யு.எம். அலி சப்ரி, திரான் அலஸ், விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, மரிஜான் ஃபலீல், எஸ்.எம்.எம்.முஷாரப், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனைகளுடன் இப்தார் நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, 'இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளதையிட்டு நான் பெருமையடைகிறேன். நாம் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து, எமது ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், சமாதானத்திற்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் இது ஒரு சிறந்த தருணம் எனத் தெரிவித்தார்.


மஹிந்தவின் தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு samugammedia முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு, இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பல முக்கிய இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகளை பாராட்டினர்.இந்நிகழ்வில் அமைச்சர்களான எம்.யு.எம். அலி சப்ரி, திரான் அலஸ், விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, மரிஜான் ஃபலீல், எஸ்.எம்.எம்.முஷாரப், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனைகளுடன் இப்தார் நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, 'இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளதையிட்டு நான் பெருமையடைகிறேன். நாம் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து, எமது ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், சமாதானத்திற்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் இது ஒரு சிறந்த தருணம் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement