• Sep 20 2024

கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி - 16பேர் கைது!

Tamil nila / Jun 12th 2024, 9:01 pm
image

Advertisement

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் 12.06.2024 இன்று கைது செய்யப்பட்டனர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல்,ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்

கட்டைக்காட்டில் இருந்து நேற்று  ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை இன்று காலை 8 படகுகளுடன் குறித்த 16பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரை கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன் விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக இன்றும் சட்டவிரோத மீன்பிடிக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்து இலஞ்சம் கொடுத்து தொழில் புரிவதாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்களை காங்கேசன்துறையில் இருந்து வரும் டோரா படகுகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்திலையே பல உண்மைகள் வெளிவந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்


கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி - 16பேர் கைது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் 12.06.2024 இன்று கைது செய்யப்பட்டனர்வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல்,ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்கட்டைக்காட்டில் இருந்து நேற்று  ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை இன்று காலை 8 படகுகளுடன் குறித்த 16பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரை கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன் விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக இன்றும் சட்டவிரோத மீன்பிடிக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்து இலஞ்சம் கொடுத்து தொழில் புரிவதாக கேள்வி எழுப்பியுள்ளனர்.இவர்களை காங்கேசன்துறையில் இருந்து வரும் டோரா படகுகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்திலையே பல உண்மைகள் வெளிவந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement