கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் ஈடுபடுகின்ற நிலையில் கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன.
இவற்றிற்கு எவரும் உரிமை கோராத நிலையில் அவை குறித்த பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் சட்ட விரோத மீன்பிடி வலைகள் பறிமுதல். கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் ஈடுபடுகின்ற நிலையில் கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன.இவற்றிற்கு எவரும் உரிமை கோராத நிலையில் அவை குறித்த பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.