2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கு இடையில் ‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்யவிருக்கும் விவாதத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை ‘சர்வஜன பலய’ வின் ஜனாதிபதி வேட்பாளர், தொழிலதிபர் திலித் ஜயவீர உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம், ஜனாதிபதி பதவிக்கு வாக்களித்தால், தாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் கொள்கைகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலைக் காண இலங்கையர்களுக்கு இந்த விவாதம், புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவாதத்தில் கலந்துகொள்ள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் அனைவரும் இந்த விவாததத்தில் பங்கேற்கவேண்டும் என்று திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் ஏனையோருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி வேட்பாளர் திலித் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கு இடையில் ‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்யவிருக்கும் விவாதத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை ‘சர்வஜன பலய’ வின் ஜனாதிபதி வேட்பாளர், தொழிலதிபர் திலித் ஜயவீர உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.இதன் மூலம், ஜனாதிபதி பதவிக்கு வாக்களித்தால், தாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் கொள்கைகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலைக் காண இலங்கையர்களுக்கு இந்த விவாதம், புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விவாதத்தில் கலந்துகொள்ள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்கள் அனைவரும் இந்த விவாததத்தில் பங்கேற்கவேண்டும் என்று திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.