• Oct 02 2024

2 நாட்களில் கிடைக்கும் ஐ.எம்.எப். முதல் தவணை நிதி ! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 11:04 pm
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதல் தவணை நிதியை, இலங்கை இன்னும்  இரண்டு  நாட்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சர்வதேச நாணய நிதியத்தின் நாணய மற்றும் மூலதன சந்தைத் துறையின் கடன் மூலதன சந்தைப் பிரிவின் தலைவர் பீட்டர் புரூயர்  இதனைத் தெரிவித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில், சீர்திருத்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அத்துடன், இலங்கை மத்திய வங்கியை மேலும் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையுடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிதியை வழங்குவது, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் நடைபெறும் என்றும் சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது.

2 நாட்களில் கிடைக்கும் ஐ.எம்.எப். முதல் தவணை நிதி SamugamMedia சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதல் தவணை நிதியை, இலங்கை இன்னும்  இரண்டு  நாட்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச நாணய நிதியத்தின் நாணய மற்றும் மூலதன சந்தைத் துறையின் கடன் மூலதன சந்தைப் பிரிவின் தலைவர் பீட்டர் புரூயர்  இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில், சீர்திருத்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், இலங்கை மத்திய வங்கியை மேலும் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கையுடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிதியை வழங்குவது, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் நடைபெறும் என்றும் சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement