• May 18 2024

இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகளை IMF விதிக்கவில்லை - மைத்திரி SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 5:01 pm
image

Advertisement

இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகள் எதனையும் சர்வதேச நாணய நிதியம் விதிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய  மைத்திரிபால சிறிசேன, அரச வருமானத்தை துரிதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூடுதலான வருமானம் பெறுபவர்களிடமிருந்து வரியை அறவிடுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கையில் வருமானங்களிற்கிடையில் முரண்பாடு அதிகரித்துள்ளது. 

நாட்டில் உள்ள உணவு மாற்று நீரை குடிக்காமல் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்பவர்களும் இலங்கையில் இருக்கிறார்கள். அதேபோன்று பட்டினியால் வாடுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

இந்த நிலைமைகளை தீர்ப்பதற்கு, வருமான இடைவெளிகளை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயம்.  

ஒரு சிலர் மிகவும் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்ற நேரத்தில், பலர் உணவை பெற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கின்றனர். 

அத்துடன், இன்று மருந்து விலையை பார்க்கின்றபோது சாதாரண ஏழை மக்களுக்கு மருத்துவர்கள் கூறும் மருந்துகளை மருந்தகங்களில் கொள்வனவு செய்யமுடியாத நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகளை IMF விதிக்கவில்லை - மைத்திரி SamugamMedia இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகள் எதனையும் சர்வதேச நாணய நிதியம் விதிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய  மைத்திரிபால சிறிசேன, அரச வருமானத்தை துரிதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கூடுதலான வருமானம் பெறுபவர்களிடமிருந்து வரியை அறவிடுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கையில் வருமானங்களிற்கிடையில் முரண்பாடு அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள உணவு மாற்று நீரை குடிக்காமல் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்பவர்களும் இலங்கையில் இருக்கிறார்கள். அதேபோன்று பட்டினியால் வாடுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.இந்த நிலைமைகளை தீர்ப்பதற்கு, வருமான இடைவெளிகளை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயம்.  ஒரு சிலர் மிகவும் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்ற நேரத்தில், பலர் உணவை பெற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கின்றனர். அத்துடன், இன்று மருந்து விலையை பார்க்கின்றபோது சாதாரண ஏழை மக்களுக்கு மருத்துவர்கள் கூறும் மருந்துகளை மருந்தகங்களில் கொள்வனவு செய்யமுடியாத நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement