ஒக்டோபர் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அதன்படி 14 லட்சத்து 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து 32 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் இது குறித்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்டோருக்கு ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும பயனர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல். samugammedia ஒக்டோபர் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.அதன்படி 14 லட்சத்து 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து 32 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் இது குறித்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்டோருக்கு ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.