• Sep 20 2024

உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Chithra / Jan 8th 2023, 7:17 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மரத்தாலான வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்த்ரிக் வாக்குப்பெட்டிகள், இம்முறைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், அரசியல் கட்சியையோ அல்லது குழுவையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிப்பதற்கு அல்லது மற்றுமொரு தரப்பை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளுக்காக, அரச சொத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வாக்கெடுப்பு இடம்பெறும் மாவட்டங்களில், அரச உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தல், பதவி உயர்த்தல் மற்றும் இடமாற்றல் முதலான பணிகளை வரையறைக்கு உட்படுத்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறியப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மரத்தாலான வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்த்ரிக் வாக்குப்பெட்டிகள், இம்முறைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், அரசியல் கட்சியையோ அல்லது குழுவையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிப்பதற்கு அல்லது மற்றுமொரு தரப்பை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளுக்காக, அரச சொத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை, வாக்கெடுப்பு இடம்பெறும் மாவட்டங்களில், அரச உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தல், பதவி உயர்த்தல் மற்றும் இடமாற்றல் முதலான பணிகளை வரையறைக்கு உட்படுத்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறியப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement