• May 05 2025

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / May 4th 2025, 8:29 am
image

 

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும்  6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல். தம்மிக கே. விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை இறுதி நாளான 2025 மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பெறவுள்ளவர்கள், உள்ளுராட்சி தேர்தலுக்குப் பிறகு பணிகள் தொடங்கும் முதல் நாளில், அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தி வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு  மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும்  6ஆம் திகதி நடைபெறவுள்ளது.இந்தநிலையில் தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல். தம்மிக கே. விஜயசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி, வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை இறுதி நாளான 2025 மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பெறவுள்ளவர்கள், உள்ளுராட்சி தேர்தலுக்குப் பிறகு பணிகள் தொடங்கும் முதல் நாளில், அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தி வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement