• May 17 2024

ராஜபக்ச குடும்பத்துக்கு நீதி மன்றம் அனுப்பிய முக்கிய நோட்டீஸ்

harsha / Dec 9th 2022, 5:15 pm
image

Advertisement

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான சனத் நிஷாந்த, பிரசன்ன ரணதுங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

“ கோட்டகோகம ” பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஐவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக  சிங்கள பத்திரிகை ஒன்று  தெரிவித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட மற்றும் ஜனாத் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்துக்கு நீதி மன்றம் அனுப்பிய முக்கிய நோட்டீஸ் 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான சனத் நிஷாந்த, பிரசன்ன ரணதுங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. “ கோட்டகோகம ” பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஐவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக  சிங்கள பத்திரிகை ஒன்று  தெரிவித்துள்ளது.மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட மற்றும் ஜனாத் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement