• May 19 2024

கண்பார்வை இழந்தமைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தே காரணம்.???samugammedia

Sharmi / May 8th 2023, 10:12 am
image

Advertisement

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமித் தொற்று காணப்படுவதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட அனைத்து நோயாளர்களும் பார்வையை இழந்துள்ளதாகவும் மருந்தில் விசத்தன்மை உள்ளதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் இருப்பதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளிகள் பார்வையை முற்றாக இழந்துவிட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் சில நோயாளிகள் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

கண்பார்வை இழந்தமைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தே காரணம்.samugammedia இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமித் தொற்று காணப்படுவதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட அனைத்து நோயாளர்களும் பார்வையை இழந்துள்ளதாகவும் மருந்தில் விசத்தன்மை உள்ளதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் இருப்பதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளிகள் பார்வையை முற்றாக இழந்துவிட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் சில நோயாளிகள் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement