• May 22 2024

2024ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் தொடர்பில் வெளியாகிய தகவல்!samugammedia

Tamil nila / Dec 10th 2023, 10:50 pm
image

Advertisement

2024ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய மூன்றும் கலந்த ‘Peach Fuzz’ எனும் நிறம் வண்ணமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த வண்ணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமல்ல மனத்துக்கும் இதமளிப்பதாக அமெரிக்காவிலுள்ள Pantone வண்ண நிறுவனம் தெரிவித்தது. Peach Fuzz’ வண்ணம் நல்ல பண்புகளைத் தூண்டி வலிமை, ஆற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

மென்மையான உணர்வு, அன்பு, ஒருவர் மற்றவரிடம் காட்ட வேண்டிய கனிவு, பகிர்ந்து வாழ்வதன் அர்த்தம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணமாகவும் ‘Peach Fuzz’ இருக்கிறது.

அடுத்த ஓராண்டில் வீட்டுப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள், உடைகள் என மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள்கள் ‘Peach Fuzz’ வண்ணத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தனிமையைப் போக்கி மன அமைதியைக் கொடுக்கக்கூடிய ஆற்றல் ‘Peach Fuzz’ நிறத்துக்கு இருக்கிறது என்றும் அது கூறுகிறது.

2024ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் தொடர்பில் வெளியாகிய தகவல்samugammedia 2024ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய மூன்றும் கலந்த ‘Peach Fuzz’ எனும் நிறம் வண்ணமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.இருப்பினும், அந்த வண்ணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமல்ல மனத்துக்கும் இதமளிப்பதாக அமெரிக்காவிலுள்ள Pantone வண்ண நிறுவனம் தெரிவித்தது. Peach Fuzz’ வண்ணம் நல்ல பண்புகளைத் தூண்டி வலிமை, ஆற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.மென்மையான உணர்வு, அன்பு, ஒருவர் மற்றவரிடம் காட்ட வேண்டிய கனிவு, பகிர்ந்து வாழ்வதன் அர்த்தம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணமாகவும் ‘Peach Fuzz’ இருக்கிறது.அடுத்த ஓராண்டில் வீட்டுப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள், உடைகள் என மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள்கள் ‘Peach Fuzz’ வண்ணத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.மேலும் தனிமையைப் போக்கி மன அமைதியைக் கொடுக்கக்கூடிய ஆற்றல் ‘Peach Fuzz’ நிறத்துக்கு இருக்கிறது என்றும் அது கூறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement