மாலபேயில் காரொன்றை நிறுத்துமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வகானம் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மாலபே, ஹோகந்தர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாலபே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
ஆனால், வாகனத்தின் சாரதி உத்தரவுகளை கவனிக்கத் தவறி அதற்குப் பதிலாக வேமாக பயணித்தமையினால் பொலிஸார் காரின் டயர்களில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வாகனம் வீதியோரத்தில் உள்ள கம்பத்தில் மோதி நின்றது.
பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டதில் 01.8 கிலோ கஞ்சா சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து மேலும் ஒரு கிலோ கஞ்சாவை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பஹா மாவட்டம் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய பெண்ணாவர்.
மாலபேயில் பொலிஸாரின் உத்தரவுகளை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மாலபேயில் காரொன்றை நிறுத்துமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வகானம் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.மாலபே, ஹோகந்தர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாலபே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.ஆனால், வாகனத்தின் சாரதி உத்தரவுகளை கவனிக்கத் தவறி அதற்குப் பதிலாக வேமாக பயணித்தமையினால் பொலிஸார் காரின் டயர்களில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வாகனம் வீதியோரத்தில் உள்ள கம்பத்தில் மோதி நின்றது.பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டதில் 01.8 கிலோ கஞ்சா சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து மேலும் ஒரு கிலோ கஞ்சாவை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பஹா மாவட்டம் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய பெண்ணாவர்.