• May 19 2024

வடக்கில் வீதி விபத்துக்களால் மே மாதம் மாத்திரம் 16 பேர் பரிதாப மரணம்! samugammedia

Chithra / May 30th 2023, 11:32 am
image

Advertisement

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளமை தரவுகளிலிருந்து தெரியவருகின்றது.

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களில் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இந்த மாதத்தில் அது அதிகம் என்று பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

வீதி ஒழுங்குகளைப் பேணாமல் செல்வது, அதிகரித்த வேகத்தில் பயணிப்பது மற்றும் தலைக்கவசம் முறையாக அணியாமல் பயணிப்பது என அதிகரிக்கும் வீதி விபத்துக்கான காரணங்களை பொலிஸார் பட்டியலிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொருவருமாக 16 பேர் இந்த மாதத்தில் முதல் 29 நாள்களிலும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிகத்துச் செல்லும் வீதிவிபத்துக்கள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஆராயப்படும் என்று யாழ் மாவட்டச்செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இந்த மாதத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

யாழ். நகரில் வீதி நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக ஒடுக்கமான வீதிகளிலும் 

சன நெரிசல் அதிகமான வீதிகளிலும் பகல் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதிப்பது மற்றும் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் சமூகவலைத் தளப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலரை தொடர்புகொண்டு கேட்டபோதே, 

வீதி விபத்துக்கள் தொடர்பில் நாளை புதன்கிழமை நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று குறிப்பிட்டார். 

கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் வீதி விபத்துக்கள் தொடர்பில் 

ஆராயப்பட்டிருந்தாலும் உறுதியான தீர்மானம் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை. 

இந்த நிலையிலேயே நாளை மீளவும் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வீதி விபத்துக்களால் மே மாதம் மாத்திரம் 16 பேர் பரிதாப மரணம் samugammedia வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளமை தரவுகளிலிருந்து தெரியவருகின்றது.வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களில் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இந்த மாதத்தில் அது அதிகம் என்று பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.வீதி ஒழுங்குகளைப் பேணாமல் செல்வது, அதிகரித்த வேகத்தில் பயணிப்பது மற்றும் தலைக்கவசம் முறையாக அணியாமல் பயணிப்பது என அதிகரிக்கும் வீதி விபத்துக்கான காரணங்களை பொலிஸார் பட்டியலிடுகின்றனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொருவருமாக 16 பேர் இந்த மாதத்தில் முதல் 29 நாள்களிலும் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிகத்துச் செல்லும் வீதிவிபத்துக்கள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஆராயப்படும் என்று யாழ் மாவட்டச்செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் இந்த மாதத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ். நகரில் வீதி நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக ஒடுக்கமான வீதிகளிலும் சன நெரிசல் அதிகமான வீதிகளிலும் பகல் நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதிப்பது மற்றும் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் சமூகவலைத் தளப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலரை தொடர்புகொண்டு கேட்டபோதே, வீதி விபத்துக்கள் தொடர்பில் நாளை புதன்கிழமை நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று குறிப்பிட்டார். கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் வீதி விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தாலும் உறுதியான தீர்மானம் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே நாளை மீளவும் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement