• Apr 24 2024

முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்

harsha / Dec 20th 2022, 6:18 pm
image

Advertisement

முல்லைத்தீவில் மக்களின் எதிர்ப்பினையடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அகற்றியுள்ளனர்  என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில்  வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு மக்களின் காணிகளுக்கு நில அளவை திணைக்களத்தினர் புதிதாக எல்லை கற்களை நாட்டியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து குறித்த இடத்திற்கு நேற்றையதினம் கள விஜயம் மேற்கொண்டமை  தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

கொக்கு தொடுவாய் மத்தி என்று சொல்லக்கூடிய இந்த இடத்திலே வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு அவர்களுடைய வேண்டுகோளுக்கமைய வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவை திணைக்களத்தினர் நேரடியாக இந்த பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட இடங்களுக்கு தங்களுடைய எல்லை கற்களை நாட்டி இருந்தார்கள்.

குறிப்பாக கோட்டக்காணி பிள்ளையார் கோயில், அம்பட்டன் வாய்க்கால் , வெள்ளைக்கல்லடி, குஞ்சுகால்வெளி, சிவந்தா முறிப்பு போன்றவாறான வரிசையில் உள்ள அந்த இடங்களுக்கு எல்லைக் கல்லை நாட்டிவிட்டார்கள்.

கிட்டத்தட்ட ஐம்பது , அறுபது கல் அளவில் நாட்டிவிட்டார்கள். இது சம்பந்தமாக நேற்றையதினம் என்னுடன் தொடர்பு கொண்டு கூறியதற்கு அமையவும். இங்கு அந்த மக்கள், கமக்கார அமைப்புக்கள் பிரதேச செயலகங்களோடு தொடர்பு கொண்டும் தெரிவித்திருந்ததால் அத்தோடு நான் மேலதிக அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டும் இருந்ததால் அந்த இடத்துக்கு, நாங்கள் இன்று வருகை தந்தோம். ஆனால் நில அளவை திணைக்களத்தினர் வரவில்லை.

உடனடியாக அவர்களை அழைத்து பிரதேச செயலக ஊழியர்களும், சம்பந்தப்பட்ட ஊழியர்களும் அதாவது காணிக்கு பொறுப்பாக இருப்பவர்களும், இந்த கிராம பகுதி கிராம சேவையாளரும், இங்கே வருகை தந்து அவர்களும் மக்களுக்காகத்தான், வாதாடி கதைத்து கொண்டிருந்தார்கள். ஈற்றிலே வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய பெரியவர்கள் இந்த இடத்துக்கு வருகை தந்து நில அளவை திணைக்களத்தினரிடம் இருந்து இந்த இடம் மக்களுடைய சொந்தக்காணி. உறுதிக்காணி என்பதை அந்த மக்களினுடைய அமைப்புக்கள், கமக்கார அமைப்புகள் தெளிவுபடுத்தி உடனடியாக அவர்களை பின்வாங்க செய்துவிட்டோம்.

அந்த இடத்திலிருந்து தாங்கள் போட்ட கற்களையும் எடுப்பதாக கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் மக்களோடு சேர்ந்து  விடாப்பிடியாக நின்றோம். இந்த கற்கள் அவ்வளவும், இன்றைக்கே எடுக்க வேண்டும் என. கற்கள் முழுவதும் எடுபட்டுக் கொண்டிருக்கின்றன முன்பு போடப்பட்ட பழைய கற்களின், அடிப்படையிலே இந்த காணிகள், அளக்கப்பட வேண்டுமே தவிர புதிதாக எங்களுடைய மக்களின் காணிகளுக்குள் இவர்கள் வர முடியாது என்ற நிலைப்பாட்டையும் கூறி அவர்கள் ஏற்றுக்கொண்டு இந்த கற்கள் முழுக்க இன்று அகற்றப்படுகின்றன.

இதனை பொறுத்தவரையில் பெரிய பூரிப்போடு இந்த மக்கள் இன்று இருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. நாங்கள் என்னவென்றால், இன்னொரு விடயமும் அத்தோடு சேர்ந்து வனஜீவராசிகள் திணைக்களமும், நில அளவை திணைக்களம் இந்த வெலிஓயா பகுதியில் இருந்து வந்த நில அளவை திணைக்களமும், அவர்கள் மாவட்ட செயலாளரோடும் பிரதேச செயலாளரோடும் கூடி கலந்துரையாடுவதோடு, அந்த கூட்டத்துக்கு இந்தப் பகுதி அமைப்புகளையும் அழைத்து எங்களையும் அழைப்பார்கள் என எண்ணுகின்றேன்.

இது சம்பந்தமான ஒரு கலந்துரையாடல் செய்யாமல் எந்த நடவடிக்கையும் தங்களுடைய எண்ணத்துக்கு ஏற்ப வந்து இங்கே கல்போடுவது என்பதை சுட்டிக்காட்டினோம். அதற்கமையத்தான் இந்த விடயங்கள் சீராக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்வதோடு உரம்பாய்ந்த, கொக்குத்தொடுவாய் மக்கள் மன சந்தோஷத்தோடு வீடு செல்கின்றார்கள் என தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முல்லைத்தீவில் மக்களின் எதிர்ப்பினையடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அகற்றியுள்ளனர்  என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில்  வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு மக்களின் காணிகளுக்கு நில அளவை திணைக்களத்தினர் புதிதாக எல்லை கற்களை நாட்டியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து குறித்த இடத்திற்கு நேற்றையதினம் கள விஜயம் மேற்கொண்டமை  தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.கொக்கு தொடுவாய் மத்தி என்று சொல்லக்கூடிய இந்த இடத்திலே வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவோடு அவர்களுடைய வேண்டுகோளுக்கமைய வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவை திணைக்களத்தினர் நேரடியாக இந்த பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட இடங்களுக்கு தங்களுடைய எல்லை கற்களை நாட்டி இருந்தார்கள். குறிப்பாக கோட்டக்காணி பிள்ளையார் கோயில், அம்பட்டன் வாய்க்கால் , வெள்ளைக்கல்லடி, குஞ்சுகால்வெளி, சிவந்தா முறிப்பு போன்றவாறான வரிசையில் உள்ள அந்த இடங்களுக்கு எல்லைக் கல்லை நாட்டிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஐம்பது , அறுபது கல் அளவில் நாட்டிவிட்டார்கள். இது சம்பந்தமாக நேற்றையதினம் என்னுடன் தொடர்பு கொண்டு கூறியதற்கு அமையவும். இங்கு அந்த மக்கள், கமக்கார அமைப்புக்கள் பிரதேச செயலகங்களோடு தொடர்பு கொண்டும் தெரிவித்திருந்ததால் அத்தோடு நான் மேலதிக அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டும் இருந்ததால் அந்த இடத்துக்கு, நாங்கள் இன்று வருகை தந்தோம். ஆனால் நில அளவை திணைக்களத்தினர் வரவில்லை. உடனடியாக அவர்களை அழைத்து பிரதேச செயலக ஊழியர்களும், சம்பந்தப்பட்ட ஊழியர்களும் அதாவது காணிக்கு பொறுப்பாக இருப்பவர்களும், இந்த கிராம பகுதி கிராம சேவையாளரும், இங்கே வருகை தந்து அவர்களும் மக்களுக்காகத்தான், வாதாடி கதைத்து கொண்டிருந்தார்கள். ஈற்றிலே வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய பெரியவர்கள் இந்த இடத்துக்கு வருகை தந்து நில அளவை திணைக்களத்தினரிடம் இருந்து இந்த இடம் மக்களுடைய சொந்தக்காணி. உறுதிக்காணி என்பதை அந்த மக்களினுடைய அமைப்புக்கள், கமக்கார அமைப்புகள் தெளிவுபடுத்தி உடனடியாக அவர்களை பின்வாங்க செய்துவிட்டோம்.அந்த இடத்திலிருந்து தாங்கள் போட்ட கற்களையும் எடுப்பதாக கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் மக்களோடு சேர்ந்து  விடாப்பிடியாக நின்றோம். இந்த கற்கள் அவ்வளவும், இன்றைக்கே எடுக்க வேண்டும் என. கற்கள் முழுவதும் எடுபட்டுக் கொண்டிருக்கின்றன முன்பு போடப்பட்ட பழைய கற்களின், அடிப்படையிலே இந்த காணிகள், அளக்கப்பட வேண்டுமே தவிர புதிதாக எங்களுடைய மக்களின் காணிகளுக்குள் இவர்கள் வர முடியாது என்ற நிலைப்பாட்டையும் கூறி அவர்கள் ஏற்றுக்கொண்டு இந்த கற்கள் முழுக்க இன்று அகற்றப்படுகின்றன. இதனை பொறுத்தவரையில் பெரிய பூரிப்போடு இந்த மக்கள் இன்று இருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. நாங்கள் என்னவென்றால், இன்னொரு விடயமும் அத்தோடு சேர்ந்து வனஜீவராசிகள் திணைக்களமும், நில அளவை திணைக்களம் இந்த வெலிஓயா பகுதியில் இருந்து வந்த நில அளவை திணைக்களமும், அவர்கள் மாவட்ட செயலாளரோடும் பிரதேச செயலாளரோடும் கூடி கலந்துரையாடுவதோடு, அந்த கூட்டத்துக்கு இந்தப் பகுதி அமைப்புகளையும் அழைத்து எங்களையும் அழைப்பார்கள் என எண்ணுகின்றேன். இது சம்பந்தமான ஒரு கலந்துரையாடல் செய்யாமல் எந்த நடவடிக்கையும் தங்களுடைய எண்ணத்துக்கு ஏற்ப வந்து இங்கே கல்போடுவது என்பதை சுட்டிக்காட்டினோம். அதற்கமையத்தான் இந்த விடயங்கள் சீராக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்வதோடு உரம்பாய்ந்த, கொக்குத்தொடுவாய் மக்கள் மன சந்தோஷத்தோடு வீடு செல்கின்றார்கள் என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement