• May 19 2024

புத்தளத்தில் 'வரைபடமற்றவர்களின் காலடி' கவிதை நூல் அறிமுக விழா!

Sharmi / Dec 6th 2022, 3:40 pm
image

Advertisement

புத்திலக்கியத்தளம் கலை, இலக்கிய நண்பர்கள் சந்திப்பு வெளியை ஸ்தாபித்தலும், முல்லை முஸ்ரிபா எழுதிய "வரைபடமற்றவர்களின் காலடி" கவிதை நூல் அறிமுகமும் புத்தளம் அல்காசிமி சிட்டி ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற விவசாய ஆலோசகர் வை.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலை, இலக்கிய நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்.

இதன்போது, ஏற்பாட்டுரையை மன்கலைத் தென்றல் எச்.எம்.சுஹைப் ஆசிரியரயரும், வரைபடமற்றவர்களின் காலடி கவிதை அறிமுகத்தை முல்லை ரிஸானாவும், திறனாய்வுரையை மூத்த இலக்கியவாதி ஓய்வு பெற்ற அதிபர்  மா. நாகராஜாவும், நூலின் நயவுரையை அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களும் வழங்கினர்.

அத்துடன், கவிஞர், கலைவாருதி ஹாஜா அலாவுதீன் கவிதை வாசித்தார். ஏற்புரை மற்றும் ஸ்தாபகவுரையையும் நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா முன்வைத்தார்.

முசலி பிரதேசசபை முன்னாள் தவிசாளர் டபிள்யூ. எம்.எஹியான் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டதுடன்,  நிகழ்வுக்கு வருகை தந்த கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் குறித்த கவிதை நூல் வழங்கப்பட்டன.

அத்துடன், கவிஞர் முல்லை முஸ்ரிபாவின் இலக்கிய பயணத்தை கௌரவிக்கும் வகையில், ரத்மல்யாய முல்லை ஸ்கீம் கிராம மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, புத்திலக்கியத்தளம் கலை, இலக்கிய நண்பர்கள் சந்திப்பு வெளியை மேலும் ஆரோக்கியமானதாக முன்னெடுத்து செல்வது, ஒன்றுகூடல்களை நடாத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.



புத்தளத்தில் 'வரைபடமற்றவர்களின் காலடி' கவிதை நூல் அறிமுக விழா புத்திலக்கியத்தளம் கலை, இலக்கிய நண்பர்கள் சந்திப்பு வெளியை ஸ்தாபித்தலும், முல்லை முஸ்ரிபா எழுதிய "வரைபடமற்றவர்களின் காலடி" கவிதை நூல் அறிமுகமும் புத்தளம் அல்காசிமி சிட்டி ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.ஓய்வு பெற்ற விவசாய ஆலோசகர் வை.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலை, இலக்கிய நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்.இதன்போது, ஏற்பாட்டுரையை மன்கலைத் தென்றல் எச்.எம்.சுஹைப் ஆசிரியரயரும், வரைபடமற்றவர்களின் காலடி கவிதை அறிமுகத்தை முல்லை ரிஸானாவும், திறனாய்வுரையை மூத்த இலக்கியவாதி ஓய்வு பெற்ற அதிபர்  மா. நாகராஜாவும், நூலின் நயவுரையை அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களும் வழங்கினர்.அத்துடன், கவிஞர், கலைவாருதி ஹாஜா அலாவுதீன் கவிதை வாசித்தார். ஏற்புரை மற்றும் ஸ்தாபகவுரையையும் நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா முன்வைத்தார்.முசலி பிரதேசசபை முன்னாள் தவிசாளர் டபிள்யூ. எம்.எஹியான் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டதுடன்,  நிகழ்வுக்கு வருகை தந்த கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் குறித்த கவிதை நூல் வழங்கப்பட்டன.அத்துடன், கவிஞர் முல்லை முஸ்ரிபாவின் இலக்கிய பயணத்தை கௌரவிக்கும் வகையில், ரத்மல்யாய முல்லை ஸ்கீம் கிராம மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இதேவேளை, புத்திலக்கியத்தளம் கலை, இலக்கிய நண்பர்கள் சந்திப்பு வெளியை மேலும் ஆரோக்கியமானதாக முன்னெடுத்து செல்வது, ஒன்றுகூடல்களை நடாத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement