• May 19 2024

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் இராசயன குண்டு வீச்சினால் மக்கள் உடல் கருகி உயிரிழந்தனர் - மருத்துவப் போராளி சாட்சியம்! samugammedia

Tamil nila / May 17th 2023, 5:36 pm
image

Advertisement

2009 ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இரசாயன குண்டுகள் வீசப்பட்டு, போராளிகளும் ,பொது மக்களும் உடல் கருகி இறக்கும் வகையில் இராணுவத்தினால் மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவப் போராளி பாபு கஜேந்தினி தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

விடுதலை புலிகள் அமைப்பில் சேர்வதற்கு சென்ற  உடன்  மாலதி படையணியில் இணைத்து கொண்டதாகவும் பின்னர் புலிகள் தன்னை மருத்துவம் படிக்க விட்டதாகவும் கூறியுள்ளார். 

2008 வரை மருத்துவ பிரிவில் இருந்த பின்னர் தவிர்க்க முடியாத  சூழ்நிலை காரணமாக களனி பிரிவுக்கு சென்றுள்ளார். 

 இது தொடர்பாக குறிப்பிடுகையில், 

என்னால் மறக்க முடியாது என்றால் அது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமே. அங்கு போராளிகளாயினும் அல்லது பொதுமக்களாயினும் கூட்டங்களாகவே சிறுவர்களை வங்கரிற்குள் பாதுகாப்பாக விட்டு விட்டு இருப்பார்கள். 

அந்த இடத்தில் எறிகணை வீசப்பட்டால் அதில் இருப்போர் உடல் சிதறி இறப்பார்கள். 

2009  மே 10 திகதியளவில் அனைவரையும் வங்கரிற்குள் பாதுகாப்பாக விட்ட பின்னர் நான் ஒரு கரையாக நின்றேன். அப்பொழுது பொஸ்பரஸ் குண்டு அடிக்கப்பட்டது. அதில் பல மக்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 

அவற்றை தொட்டு பார்த்தால் வெறும் கரி கட்டையே  மிஞ்சும். அவ்வாறாக இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் பயங்கரமான தாக்குதலையே மேற்கொண்டு மக்களை அழித்தனர். 

எனக்கு  அதன் வெக்கை பட்டே உடம்பு  எரிந்தது போன்று காணப்படுகின்றது. நேரடியாக அதில் உயிரிழந்த  போராளிகளும் ,மக்களும் எவ்வளவு  வேதனை அடைந்திருப்பார்கள். 

அத்தோடு அத்தோடு, வட்டுவாலிற்குள் தண்ணீரா? இரத்தமா? என்ற வித்தியாசமின்றி முழுவதும் இரத்த வெள்ளம். 

இரத்தமும் சதையுமாக எமது மக்கள் இருந்த  மூலமே நாம் கடந்து வந்தோம். அதன் பின்னர் இராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டோம்.

அது மட்டுமன்றி இறுதி யுத்தத்தின் போது அடிக்கப்பட்டது பொஸ்பரஸ் குண்டு தான். ஆனால், ஆரம்பத்தில் அது பொஸ்பரஸ் குண்டு என்று அறிந்திருக்கவில்லை. 

கிபிர் அடிக்கப்பட்டால் அந்த இடம் பள்ளமாகும் என்பதுடன் அதன் தாக்கமும் குறைவாக காணப்படும். காயம் ஏற்படும் அளவு காணப்பட்டாலும் உயிரிழப்பு குறைவாக இருக்கும். 

ஆனல் அப்பொழுது அடிக்கப்பட்ட குண்டின் மூலம் பெற்றோலின் மூலம் ஒருவரை எரித்தல் யூவாறு கருகுவாரோ அவ்வாறே எமது மக்களும் கருகினார்கள். அதன் பின்னரே அது பொஸ்பரஸ் குண்டு என்று உறுதி செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் இராசயன குண்டு வீச்சினால் மக்கள் உடல் கருகி உயிரிழந்தனர் - மருத்துவப் போராளி சாட்சியம் samugammedia 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இரசாயன குண்டுகள் வீசப்பட்டு, போராளிகளும் ,பொது மக்களும் உடல் கருகி இறக்கும் வகையில் இராணுவத்தினால் மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவப் போராளி பாபு கஜேந்தினி தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் அமைப்பில் சேர்வதற்கு சென்ற  உடன்  மாலதி படையணியில் இணைத்து கொண்டதாகவும் பின்னர் புலிகள் தன்னை மருத்துவம் படிக்க விட்டதாகவும் கூறியுள்ளார். 2008 வரை மருத்துவ பிரிவில் இருந்த பின்னர் தவிர்க்க முடியாத  சூழ்நிலை காரணமாக களனி பிரிவுக்கு சென்றுள்ளார்.  இது தொடர்பாக குறிப்பிடுகையில், என்னால் மறக்க முடியாது என்றால் அது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமே. அங்கு போராளிகளாயினும் அல்லது பொதுமக்களாயினும் கூட்டங்களாகவே சிறுவர்களை வங்கரிற்குள் பாதுகாப்பாக விட்டு விட்டு இருப்பார்கள். அந்த இடத்தில் எறிகணை வீசப்பட்டால் அதில் இருப்போர் உடல் சிதறி இறப்பார்கள். 2009  மே 10 திகதியளவில் அனைவரையும் வங்கரிற்குள் பாதுகாப்பாக விட்ட பின்னர் நான் ஒரு கரையாக நின்றேன். அப்பொழுது பொஸ்பரஸ் குண்டு அடிக்கப்பட்டது. அதில் பல மக்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அவற்றை தொட்டு பார்த்தால் வெறும் கரி கட்டையே  மிஞ்சும். அவ்வாறாக இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் பயங்கரமான தாக்குதலையே மேற்கொண்டு மக்களை அழித்தனர். எனக்கு  அதன் வெக்கை பட்டே உடம்பு  எரிந்தது போன்று காணப்படுகின்றது. நேரடியாக அதில் உயிரிழந்த  போராளிகளும் ,மக்களும் எவ்வளவு  வேதனை அடைந்திருப்பார்கள். அத்தோடு அத்தோடு, வட்டுவாலிற்குள் தண்ணீரா இரத்தமா என்ற வித்தியாசமின்றி முழுவதும் இரத்த வெள்ளம். இரத்தமும் சதையுமாக எமது மக்கள் இருந்த  மூலமே நாம் கடந்து வந்தோம். அதன் பின்னர் இராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டோம்.அது மட்டுமன்றி இறுதி யுத்தத்தின் போது அடிக்கப்பட்டது பொஸ்பரஸ் குண்டு தான். ஆனால், ஆரம்பத்தில் அது பொஸ்பரஸ் குண்டு என்று அறிந்திருக்கவில்லை. கிபிர் அடிக்கப்பட்டால் அந்த இடம் பள்ளமாகும் என்பதுடன் அதன் தாக்கமும் குறைவாக காணப்படும். காயம் ஏற்படும் அளவு காணப்பட்டாலும் உயிரிழப்பு குறைவாக இருக்கும். ஆனல் அப்பொழுது அடிக்கப்பட்ட குண்டின் மூலம் பெற்றோலின் மூலம் ஒருவரை எரித்தல் யூவாறு கருகுவாரோ அவ்வாறே எமது மக்களும் கருகினார்கள். அதன் பின்னரே அது பொஸ்பரஸ் குண்டு என்று உறுதி செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement