• Nov 24 2024

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்தின் பயன்படாத கட்டிடங்கள் அகற்றப்பட்டது..!

Sharmi / Oct 2nd 2024, 9:37 am
image

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்தார்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை வவுனியாவின் பிரதான அரச பேருந்து நிலையமாக செயற்பட்டு வந்தது.

இந்நிலையில் வவுனியா யாழ்வீதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதியபேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலைய மூடாகவே அரச, தனியார் பேருந்துகள் சீரான முறையில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது.  

இந்நிலையில் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பயன்பாடற்று காணப்பட்ட பழமையான தரிப்பிடக் கட்டங்கள் நகர சபையால் அகற்றப்பட்டு வருகின்றது.

அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்தின் பயன்படாத கட்டிடங்கள் அகற்றப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்தார்.வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை வவுனியாவின் பிரதான அரச பேருந்து நிலையமாக செயற்பட்டு வந்தது. இந்நிலையில் வவுனியா யாழ்வீதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதியபேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலைய மூடாகவே அரச, தனியார் பேருந்துகள் சீரான முறையில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது.  இந்நிலையில் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பயன்பாடற்று காணப்பட்ட பழமையான தரிப்பிடக் கட்டங்கள் நகர சபையால் அகற்றப்பட்டு வருகின்றது.அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement