• Sep 21 2024

Tamil nila / Apr 21st 2023, 6:40 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை ஈ தாக்கமானது இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அந்த நோய் தாக்கம் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது.

தொடர்ச்சியாக இந்த வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், த வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.


யாழில், தென்னை மரங்களுக்கு வந்த சோதனை samugammedia யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளை ஈ தாக்கமானது இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.இதனையடுத்து, அந்த நோய் தாக்கம் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது.தொடர்ச்சியாக இந்த வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், த வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement