• Dec 09 2024

கிண்ணியாவில் புதிய வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வு...!

Sharmi / May 1st 2024, 9:51 am
image

கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான   ஏ.எல்.எம் அத்தாவுல்லாவின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்திற்கு 21 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உப்பாறு  மீள்குடியேற்ற  பிரதேச உட்கட்டமைப்பு வீதி அபிவிருத்திக்காக 1.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வானது கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம் அத்தாவுல்லா தலைமையில் நேற்றையதினம் (30) உப்பாறு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம். எச்.எம். கனி , கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிட்டல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கிண்ணியாவில் புதிய வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வு. கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான   ஏ.எல்.எம் அத்தாவுல்லாவின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்திற்கு 21 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன் முதற்கட்டமாக கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உப்பாறு  மீள்குடியேற்ற  பிரதேச உட்கட்டமைப்பு வீதி அபிவிருத்திக்காக 1.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வானது கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம் அத்தாவுல்லா தலைமையில் நேற்றையதினம் (30) உப்பாறு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம். எச்.எம். கனி , கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிட்டல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement