• Nov 23 2024

இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்துவைப்பு...!

Sharmi / May 10th 2024, 2:36 pm
image

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் இன்று(10) காலை திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வானது, சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது. 

யாழ்.மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்தார். 

இக்கட்டிட தொகுதியானது வைத்திய நிபுணர் பா.சயந்தன் மற்றும் அவரது பாரியார் கிருபாளினி ஆகியோரின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன்,சத்திரசிகிச்சை பேராசிரியர் வைத்திய நிபுணர் எஸ்.ரவிராஜ் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான ஜெ.கஜேந்திரன்,என்.சரவணபவ,வை.சிவாகரன்,ஆர்.துவாரதீபன் ஆகியோரும்,விஷேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரி பொ.பிறேமினியும் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்துவைப்பு. 126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் இன்று(10) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது, சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்தார். இக்கட்டிட தொகுதியானது வைத்திய நிபுணர் பா.சயந்தன் மற்றும் அவரது பாரியார் கிருபாளினி ஆகியோரின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன்,சத்திரசிகிச்சை பேராசிரியர் வைத்திய நிபுணர் எஸ்.ரவிராஜ் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான ஜெ.கஜேந்திரன்,என்.சரவணபவ,வை.சிவாகரன்,ஆர்.துவாரதீபன் ஆகியோரும்,விஷேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரி பொ.பிறேமினியும் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement