இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டது.
ஊக்குவிப்பு கொடுப்பனவு முத்திரைகள் வழங்கும் நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முகமது கனி தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது வெளிநாடு சென்றுள்ள பெண்களின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு 5000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகள் (10,000 ரூபா) வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 பேர் முதல் தடவையாக கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியிடத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளனர்.
அவர்களில் குறிப்பிடப்பட்ட சில பெண்களின் பாதுகாவலர்களிடம் குறித்த முத்திரைகள் வழங்கப்பட்டன. இம்முத்திரைகளுக்கான பொருட்களை சந்தோச நிறுவனத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கிண்ணியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களுக்கான முத்திரைகள் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கிண்ணியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டது.ஊக்குவிப்பு கொடுப்பனவு முத்திரைகள் வழங்கும் நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முகமது கனி தலைமையில் இன்று இடம்பெற்றது.இதன்போது வெளிநாடு சென்றுள்ள பெண்களின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு 5000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகள் (10,000 ரூபா) வழங்கப்பட்டது.2024 ஆம் ஆண்டில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 பேர் முதல் தடவையாக கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியிடத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடப்பட்ட சில பெண்களின் பாதுகாவலர்களிடம் குறித்த முத்திரைகள் வழங்கப்பட்டன. இம்முத்திரைகளுக்கான பொருட்களை சந்தோச நிறுவனத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கிண்ணியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களுக்கான முத்திரைகள் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கிண்ணியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.