நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை, ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பில் வசிக்கும் 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த வியாழக்கிழமை (23) முதல் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான மரங்கள் சரிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு,
11 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் போதிய இடவசதி இன்மையால் ஏனைய 47 குடும்பங்களை சேர்ந்த 117 பேர் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இனிவரும் காலங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசினால் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - மரங்கள் முறிந்து விழும் அபாயம் 162 பேர் இடம்பெயர்வு நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை, ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பில் வசிக்கும் 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த வியாழக்கிழமை (23) முதல் இடம்பெயர்ந்துள்ளனர்.இந்த குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான மரங்கள் சரிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, 11 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் போதிய இடவசதி இன்மையால் ஏனைய 47 குடும்பங்களை சேர்ந்த 117 பேர் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, இனிவரும் காலங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசினால் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.