• Nov 22 2024

தொடரும் சீரற்ற வானிலை; வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதிகள் - ஒருவர் மாயம்!

Chithra / Oct 11th 2024, 11:49 am
image

  

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கடுவெல வெலி, போதிய பகுதிக்கு அருகில் ஒருவர் கால்வாயில் விழுந்து காணாமல் போயுள்ளார். 

நவகமுவ பொலிஸார் அவரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக களு மற்றும் வளவ கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எஹலியகொடை, இரத்தினபுரி, இறக்குவானை,  பெல்மதுளை, புவாக்பிட்டிய ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த பிரதேச மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இன்று காலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 

காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஹொரண பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை; வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதிகள் - ஒருவர் மாயம்   தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கடுவெல வெலி, போதிய பகுதிக்கு அருகில் ஒருவர் கால்வாயில் விழுந்து காணாமல் போயுள்ளார். நவகமுவ பொலிஸார் அவரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக களு மற்றும் வளவ கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், எஹலியகொடை, இரத்தினபுரி, இறக்குவானை,  பெல்மதுளை, புவாக்பிட்டிய ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேச மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை, இன்று காலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஹொரண பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement