• Dec 03 2024

ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து..!

Sharmi / Oct 11th 2024, 11:56 am
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (11)வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ச.குகதாசன் தலைமையிலான குழுவினர்,

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வடகிழக்கில் இம் மாவட்டத்தில் மாத்திரம் இணைந்து கூட்டணியாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளோடு இணைந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

ஓரணியாக இணைந்தால் தான் இரண்டு ஆசனங்களையாவது பெற முடியும்.

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.

எனவே, தான் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கூட்டணியாக இணைந்துள்ளோம். 

கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக பாதிப்படைந்த தமிழ் சமூகம் இவ்வாறான விடயங்களில் தமிழ் தேசியத்தை பாதுகாக்க ஒற்றுமையாக செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்தார்.


ஒற்றுமையாக செயற்பட்டால் இரு பிரதிநிதித்துவத்தை பெறலாம்- திருமலையில் குகதாசன் கருத்து. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (11)வேட்பு மனு தாக்கல் செய்தார்.திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ச.குகதாசன் தலைமையிலான குழுவினர்,திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.வடகிழக்கில் இம் மாவட்டத்தில் மாத்திரம் இணைந்து கூட்டணியாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளோடு இணைந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.ஓரணியாக இணைந்தால் தான் இரண்டு ஆசனங்களையாவது பெற முடியும்.கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.எனவே, தான் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க கூட்டணியாக இணைந்துள்ளோம். கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக பாதிப்படைந்த தமிழ் சமூகம் இவ்வாறான விடயங்களில் தமிழ் தேசியத்தை பாதுகாக்க ஒற்றுமையாக செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement