• Nov 17 2024

நாட்டில் சீரற்ற வானிலை; ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு! மரங்கள் முறிந்து விழும் அபாயம்

Chithra / Jul 9th 2024, 11:05 am
image

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகளு ஓயா, ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த ஆறுகளை அண்மித்துள்ள தாழ்நிலபகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாகுறு கங்கை, குடா கங்கை, பணாதுகம ஆகியவற்றை அண்மித்துள்ள தாழ்நிலபகுதிகளில் வசிக்கும் மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சீரற்ற வானிலை; ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு மரங்கள் முறிந்து விழும் அபாயம்  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகளு ஓயா, ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த ஆறுகளை அண்மித்துள்ள தாழ்நிலபகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் மாகுறு கங்கை, குடா கங்கை, பணாதுகம ஆகியவற்றை அண்மித்துள்ள தாழ்நிலபகுதிகளில் வசிக்கும் மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement