மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் கங்கேவத்தை பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர்தேக்கத்தில் மிக பிரமாண்டமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மவுஸ்சாகலை நீர்தேக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம் நிலவிவருகிறது.
இதனால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரித்துள்ளனர்.
அத்தோடு பாரியளவில் அகன்ற குழிகள் மூடாமல் உள்ளதால் அப் பகுதியில் விரகு தேடி செல்லும் சிறார்கள் மற்றும் முதியோர் பாரிய சிறமத்தை எதிர் நோக்கும் நிலையில் உள்ளது.
இதனால் உயிர் ஆபத்து உள்ளது என தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரிப்பு - அதிகாரிகள் பாராமுகம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் கங்கேவத்தை பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர்தேக்கத்தில் மிக பிரமாண்டமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட மவுஸ்சாகலை நீர்தேக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. இதனால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.இதனால் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோர் அதிகரித்துள்ளனர்.அத்தோடு பாரியளவில் அகன்ற குழிகள் மூடாமல் உள்ளதால் அப் பகுதியில் விரகு தேடி செல்லும் சிறார்கள் மற்றும் முதியோர் பாரிய சிறமத்தை எதிர் நோக்கும் நிலையில் உள்ளது.இதனால் உயிர் ஆபத்து உள்ளது என தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.