• Sep 08 2024

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு? samugammedia

Chithra / Sep 3rd 2023, 1:39 pm
image

Advertisement

இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

விலை சூத்திரத்தின் படி, நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி இடம்பெற்ற எரிவாயு விலை திருத்தத்தில், விலை அதிகரிக்கப்படவிருந்த போதிலும், நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு விலையை திருத்தாமல்  இருக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாய்க்கும், 05 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாய்க்கும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு samugammedia இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.விலை சூத்திரத்தின் படி, நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.ஓகஸ்ட் 4 ஆம் திகதி இடம்பெற்ற எரிவாயு விலை திருத்தத்தில், விலை அதிகரிக்கப்படவிருந்த போதிலும், நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு விலையை திருத்தாமல்  இருக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாய்க்கும், 05 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாய்க்கும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement