பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையையும் அதிகரிக்க தீரமானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 18 சதவீதத்தினால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை அதிகரிக்கும் என மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கார் உதிரி பாகங்களுக்கு 15% ஆக இருந்த வற் 18% ஆக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக மோட்டார் வர்த்தகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வாகன இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணி நாட்டில் இல்லாததன் காரணமாக வாகன இறக்குமதிகள் தற்போதைக்கு சாத்தியமில்லை என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் அதிகரிப்பு. பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையையும் அதிகரிக்க தீரமானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 18 சதவீதத்தினால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை அதிகரிக்கும் என மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.மேலும், கார் உதிரி பாகங்களுக்கு 15% ஆக இருந்த வற் 18% ஆக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக மோட்டார் வர்த்தகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வாகன இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணி நாட்டில் இல்லாததன் காரணமாக வாகன இறக்குமதிகள் தற்போதைக்கு சாத்தியமில்லை என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.