• Dec 23 2024

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு - மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tamil nila / Dec 22nd 2024, 7:08 pm
image

இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் அந்த கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கடற்பரப்பைச் சூழவுள்ள கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு - மக்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் அந்த கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  கடற்பரப்பைச் சூழவுள்ள கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement